Monday 22 April 2013

உறவை சேர்ந்து வாழுங்கள்



உறவை சேர்ந்து வாழ்வதைப் பற்றி இஸ்லாம்

உறவை சேர்ந்து வாழ்வதின் பலன்கள்

1 – விசாலமான ரிஸ்க் (அருட்கொடைகள்) வழங்கப்படும்

صحيح مسلم - (ج 12 / ص 411)

4639 -  و حَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ حَدَّثَنِي أَبِي عَنْ جَدِّي حَدَّثَنِي عُقَيْلُ بْنُ خَالِدٍ قَالَ قَالَ ابْنُ شِهَابٍ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَحَبَّ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ وَيُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ

எவர் அவருக்கு அவருடைய ரிஸ்க் விசாலமாக கொடுக்கப்படுவதையும், அவருக்கு அவருடைய ஆயுள் நீட்டிக் கொடுக்கப்படுவதையும் விரும்புகிறாரோ அவர் அவருடைய உறவை சேர்ந்து வாழட்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பாளர்: அனஸ் (ரளி) நூல்: முஸ்லிம் 4639, புகாரி

2 – ஆயுளும், செல்வமும் அதிகரிக்கும்

سنن الترمذي - (ج 7 / ص 249)

1902 -  حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عِيسَى الثَّقَفِيِّ عَنْ يَزِيدَ مَوْلَى الْمُنْبَعِثِ عَنْ أَبِي هُرَيْرَةَ

عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَعَلَّمُوا مِنْ أَنْسَابِكُمْ مَا تَصِلُونَ بِهِ أَرْحَامَكُمْ فَإِنَّ صِلَةَ الرَّحِمِ مَحَبَّةٌ فِي الْأَهْلِ مَثْرَاةٌ فِي الْمَالِ مَنْسَأَةٌ فِي الْأَثَرِ

قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ وَمَعْنَى قَوْلِهِ مَنْسَأَةٌ فِي الْأَثَرِ يَعْنِي بِهِ الزِّيَادَةَ فِي الْعُمُرِ

நீங்கள் உறவை சேர்ந்து வாழ்வதற்கு உங்களுடைய வம்சங்க(ளிலுள்ளவர்களின் பெயர்)களைக் கற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் உறவை சேர்ந்து வாழ்வது குடும்பத்தில் அன்பு ஏற்படுவதற்கு காரணமாகும், மேலும் செல்வம் அதிகரிப்பதற்கும், ஆயுள் நீட்டப்படுவதற்கும் காரணமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரளி) நூல்: திர்மிதி 1902

3 – இறைவனின் உதவி கிடைக்கும்

صحيح مسلم - (ج 12 / ص 412)

4640 - حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ وَاللَّفْظُ لِابْنِ الْمُثَنَّى قَالَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ سَمِعْتُ الْعَلَاءَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ يُحَدِّثُ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ

أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي قَرَابَةً أَصِلُهُمْ وَيَقْطَعُونِي وَأُحْسِنُ إِلَيْهِمْ وَيُسِيئُونَ إِلَيَّ وَأَحْلُمُ عَنْهُمْ وَيَجْهَلُونَ عَلَيَّ فَقَالَ لَئِنْ كُنْتَ كَمَا قُلْتَ فَكَأَنَّمَا تُسِفُّهُمْ الْمَلَّ وَلَا يَزَالُ مَعَكَ مِنْ اللَّهِ ظَهِيرٌ عَلَيْهِمْ مَا دُمْتَ عَلَى ذَلِكَ

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனக்கு நெருங்கிய உறவினர்கள் இருக்கின்றனர். நான் அவர்களுடன் சேர்ந்து வாழ்கிறேன். ஆனால் அவர்கள் என்னை துண்டித்து வாழ்கின்றனர். நான் அவர்களுடன் நல்ல முறையில் நடக்கின்றேன். ஆனால் அவர்கள் என்னிடம் தீய முறையில் நடக்கின்றனர். நான் அவர்களின் கெடுதிகளை மன்னித்து சகிப்புடன் வாழ்கிறேன். ஆனால் அவர்கள் எனக்கு கெடுதி செய்கிறார்கள். (நான் என்ன செய்ய வேண்டும்?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்; (தோழரே!) நீங்கள் என்னிடம் கூறியதை போன்று இருந்தால் நீங்கள் அவர்களுக்கு சூடான சாம்பலை உண்ணக் கொடுத்ததை போன்று ஆகிவிடுவீர். மேலும் இந்நிலையில் நீங்கள் இருக்கும் காலமெல்லாம் அவர்களுக்கு எதிராக அல்லாஹ்வின் புறத்திலிருந்து உங்களுக்கு உதவி செய்யக்கூடிய ஒருவர் உங்களுடன் இருந்து கொண்டே இருப்பார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரளி) நூல்: முஸ்லிம் 4640

4 – அல்லாஹ்வின் பிரியம் கிடைக்கும்

المعجم الكبير للطبراني - (ج 7 / ص 295)

7926 -  حَدَّثَنَا مُحَمَّدُ بن عَلِيِّ بن شُعَيْبٍ السِّمْسَارُ، حَدَّثَنَا خَالِدُ بن خِدَاشٍ، حَدَّثَنَا حَمَّادُ بن زَيْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بن حَفْصٍ، عَنْ أَبِي أُمَامَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لأَبِي أَيُّوبَ بن زَيْدٍ:"يَا أَبَا أَيُّوبَ، أَلا أَدُلُّكَ عَلَى عَمِلٍ يَرْضَاهُ اللَّهُ وَرَسُولُهُ؟"قَالَ: بَلَى، قَالَ:"تُصْلِحُ بَيْنَ النَّاسِ إِذَا تَفَاسَدُوا، وَتُقَارِبُ بَيْنَهُمْ إِذَا تَبَاعَدُوا

سَيَّارٌ الشَّامِيُّ كَانَ يَنْزِلُ الْبَصْرَةَ، عَنْ أَبِي أُمَامَةَ

அபூ அய்யூப் அவர்களே! அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் பிரியப்படுகிற ஒரு அமலை உமக்கு அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள். அதற்கவர் ஆம்! அறிவியுங்கள் என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்; மக்கள் ஒருவருக்கொருவர் தீங்கிழைத்து வாழ்ந்தால் அவர்களுக்கு மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்துங்கள். அவர்கள் (சண்டையிட்டு) பிரிந்து வாழ்ந்தால் அவர்களுக்கு மத்தியில் நெருக்கத்தை ஏற்படுத்துங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் அபூ அய்யூப் (ரளி) அவர்களுக்கு கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ உமாமா (ரளி), நூல்: அல்முஃஜமுல் கபீர் லித்-தப்ரானி 7926

5 – சுவனம் கிடைக்கும்

أَفَمَنْ يَعْلَمُ أَنَّمَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ الْحَقُّ كَمَنْ هُوَ أَعْمَى إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الْأَلْبَابِ (19) الَّذِينَ يُوفُونَ بِعَهْدِ اللَّهِ وَلَا يَنْقُضُونَ الْمِيثَاقَ (20) وَالَّذِينَ يَصِلُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَنْ يُوصَلَ وَيَخْشَوْنَ رَبَّهُمْ وَيَخَافُونَ سُوءَ الْحِسَابِ (21) وَالَّذِينَ صَبَرُوا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنْفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً وَيَدْرَءُونَ بِالْحَسَنَةِ السَّيِّئَةَ أُولَئِكَ لَهُمْ عُقْبَى الدَّارِ (22) جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا وَمَنْ صَلَحَ مِنْ آَبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ وَالْمَلَائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِمْ مِنْ كُلِّ بَابٍ (23) سَلَامٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى الدَّارِ (24) وَالَّذِينَ يَنْقُضُونَ عَهْدَ اللَّهِ مِنْ بَعْدِ مِيثَاقِهِ وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَنْ يُوصَلَ وَيُفْسِدُونَ فِي الْأَرْضِ أُولَئِكَ لَهُمُ اللَّعْنَةُ وَلَهُمْ سُوءُ الدَّارِ (25) [الرعد/19-25)

உம் இறைவனால் உம் மீது நிச்சயமாக இறக்கப்பட்ட (வேதத்)தை உண்மையென அறிகிறவர் குருடராக இருப்பவரைப் போன்றவரா? நிச்சயமாக (இவ்வேதத்தின் மூலம்) அறிவுடையவர்களே நல்லுபதேசம் பெறுவார்கள்.

அவர்கள் எத்தகையவரென்றால் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுவார்கள். இன்னும் (தாம் செய்த) உடன்படிக்கையை முறித்துவிடவும் மாட்டார்கள்.

மேலும் அவர்கள் அல்லாஹ் எது சேர்த்து வைக்கப்பட வேண்டும் எனக் கட்டளையிட்டானோ அதை சேர்த்து வைப்பார்கள். இன்னும் அவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சுவார்கள். மேலும் (மறுமை நாளின்) கடுமையான கேள்வி கணக்கை குறித்தும் பயப்படுவார்கள்.

மேலும் அவர்கள் தங்கள் இறைவனின் பொருத்தத்தைத் தேடி பொறுமையை கடை பிடிப்பார்கள். தொழுகையையும் நிலை நிறுத்துவார்கள். நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (நன்முறையில்) செலவு செய்வார்கள். இத்தகையோருக்கே மறுமையில் (சுவனம்) என்ற நல்ல வீடு இருக்கிறது.

நிலையான (அந்த) சுவனங்களில் இவர்களும், இவர்களுடைய பெற்றோர்களில், இவர்களுடைய மனைவிமார்களில், இவர்களுடைய சந்ததியினர்களில் (சன்மார்க்கத்திற்கு) இசைந்து யார் நடந்தார்களோ அவர்களும் நுழைவார்கள். மலக்குகள் (சுவனத்தின்) ஒவ்வொரு வாயில் வழியாகவும் வருவார்கள்.

நீங்கள் பொறுமையை கடைபிடித்ததற்காக உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக! உங்களுடைய இறுதி வீடு மிகவும் நல்லதாயிற்று! என்று கூறுவார்கள். (அல்குர்ஆன், 13/19,24)

 

ஒரு தடவை நபி (ஸல்) அவர்களின் பேரர்களான ஹஸன் (ரளி) அவர்களுக்கும், ஹுஸைன் (ரளி) அவர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பேசாமல் இருந்தனர். அப்பொழுது ஹுஸைன் (ரளி) அவர்களிடத்தில்; நீங்கள் முதலில் உங்கள் சகோதரரை திருப்தியடையச் செய்வதற்காக அவரிடம் சென்று பேசுங்களேன். ஏனெனில் அவர் உங்களை விட வயதில் பெரியவராக இருக்கிறாரே! என்று சொல்லப்பட்டது. அதற்கு ஹுஸைன் (ரளி) அவர்கள்; இரண்டு பேருக்கு மத்தியில் பிரச்சனை ஏற்பட்டு, பின்பு அவ்விருவரில் எந்த ஒருவர் முதன்முதலாக மற்றவரிடம் திருப்தியை தேடுகிறாரோ அவர் அவ்விருவரில் முதன்மையாக சுவனத்திற்கு முந்திச் செல்வார்என்று எனது பாட்டனார் நபி (ஸல்) அவர்கள் கூறியதை   நிச்சயமாக நான் கேட்டுள்ளேன். எனவே நான் எனது பெரிய சகோதரரை விட சுவனத்திற்கு முந்திச் செல்வதை பிரியப்படவில்லை என்று கூறினார்கள். இச்செய்தி ஹஸன் (ரளி) அவர்களுக்கு கிடைத்தது. உடனடியாக விரைந்து ஹுஸைன் (ரளி) அவர்களிடம் வந்து அவரை திருப்திபடச் செய்து இருவரும் சேர்ந்து கொண்டனர்.

உறவை சேர்ந்து வாழ்வதில் இன்னும் இது போன்ற பல நன்மைகள் இருக்கின்ற காரணத்தினால் தான் அபூ உமாமா (ரளி) அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்.

ஒரு மைல் தொலைதூரம் சென்றாவது நோயாளியை நலம் விசாரிக்கச்செல், இரு மைல் தொலைதூரம் சென்றாவது உன் சகோதரனை அல்லாஹ்வுக்காகச் சந்திக்கச்செல், மூன்று மைல் தொலைதூரம் சென்றாவது பிரிந்த இருவருக்கிடையில் சமாதானத்தையும், இணக்கத்தையும் ஏற்படுத்து.

--------------------------------------------------------------------

உறவை முறித்து வாழ்வதின் கெடுதிகள்

1 – மறு உலக தண்டனையுடன் இவ்வுலகிலேயே தண்டனை விரைந்து கொடுக்கப்படும்.

سنن الترمذي - (ج 9 / ص 51)

2435 -  حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ عُيَيْنَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي بَكْرَةَ قَالَ

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ ذَنْبٍ أَجْدَرُ أَنْ يُعَجِّلَ اللَّهُ لِصَاحِبِهِ الْعُقُوبَةَ فِي الدُّنْيَا مَعَ مَا يَدَّخِرُ لَهُ فِي الْآخِرَةِ مِنْ الْبَغْيِ وَقَطِيعَةِ الرَّحِمِ

قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . ورواه أبو داود 4256

 உறவை துண்டித்து வாழ்வதை விடவும், அநியாயத்தை விடவும் வேறெந்த ஒரு பாவமும் அப்பாவத்தை செய்தவருக்கு மறுமையில் தண்டனையை பிற்படுத்தி வைத்திருப்பதுடன் இவ்வுலகிலும் அவருக்கு அல்லாஹ் தண்டனையை விரைந்து கொடுப்பதற்கு தகுதியான பாவமாக இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ பக்ரா (ரளி), நூல்: திர்மிதி 2435, அபூ தாவூத் 4256

2 – இவ்வுலகிலும், மறுமையிலும் இறை சாபம் ஏற்படும்.

فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ (22) أُولَئِكَ الَّذِينَ لَعَنَهُمُ اللَّهُ فَأَصَمَّهُمْ وَأَعْمَى أَبْصَارَهُمْ (23) [محمد/22-23)

நீங்கள் (சத்தியத்தை) புறக்கனித்து, பூமியில் குழப்பத்தை விளைவித்து, மேலும் உங்கள் உறவை துண்டித்து வாழ முனைகிறீர்களா?

இத்தகையவர்களைத்தான் அல்லாஹ் சபிக்கின்றான். மேலும் (சத்தியத்தை கேட்பதை விட்டும்) அவர்களை செவிடாக்கி விடுவான், மேலும் (நேரான பாதையை விட்டும்) அவர்களின் பார்வையை குருடாக்கி விடுவான். (அல்குர்ஆன். 47/22,23)

3 – மறுமையில் சுவனம் நுழைய முடியாது.

صحيح مسلم - (ج 12 / ص 409)

4637 -  حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ الضُّبَعِيُّ حَدَّثَنَا جُوَيْرِيَةُ عَنْ مَالِكٍ عَنْ الزُّهْرِيِّ أَنَّ مُحَمَّدَ بْنَ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ أَخْبَرَهُ أَنَّ أَبَاهُ أَخْبَرَهُ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعُ رَحِمٍ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ عَنْ عَبْدِ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ عَنْ الزُّهْرِيِّ بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ وَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ . ورواه البخاري 5525

உறவை துண்டித்து வாழ்பவன் சுவனம் புகமாட்டான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜுபைர் இப்னு முத்இம் (ரளி), நூல்: முஸ்லிம் 4637, புகாரி 5525)

இறவனின் கட்டளைப் பிரகாரமும், இறைத்தூதரின் கட்டளைப் பிரகாரமும் அல்லாஹ் நம்மை வாழச்செய்வானாக!

இறைவனும், இறைத்தூதரும் தடுத்த விஷயங்களை விட்டும் தவிர்ந்து வாழும் நற்பாக்கியத்தையும் அல்லாஹ் நமக்குத் தருவானாக! ஆமீன்!

 

No comments:

Post a Comment