Monday 22 April 2013

தூத்துக்குடி விவாதம் தொடர் 3



சட்டத்திற்கும், தகவலுக்கும் வித்தியாசம் தெரியாத பி.ஜே.

சட்டம் என்றால் குறிப்பிட்ட ஒரு நிபந்தனைப்பிரகாரம் ஒரு சொல்லை குறிப்பிட்ட விதத்தில் எழுதப்பட வேண்டும், அல்லது எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று ஒரு நூலில் தகவல் தரப்பட்டிருந்தால் அதற்கு சட்டம் எனப்படும்.

உதாரணமாக ஒரு வினைச்சொல் அல்லது பெயர்ச்சொல்லை வாவ் ( و)வில் முடிக்கும்போது அதற்கடுத்து ஒருஅலிஃபை கூடுதலாக எழுதப்பட வேண்டும் என்றோ, அல்லது எழுதப்பட்டிருக்கும் என்றோ ஒரு நூலில் கூறப்பட்டிருந்தால் அது சட்டமாகும் (பார்க்க : பக்கம்9.)

ஒரு வார்த்தையின் கடைசி ஓரத்தில்பேஷ் செய்யப்பட்டு இடம்பெற்றஹம்ஜா (ءُ)-வை வாவ் (و) ஆக எழுதப்பட்டால் அந்த வாவுக்கு அடுத்து ஒரு அலிஃபை கூடுதலாக எழுதப்பட வேண்டும், அல்லது எழுதப்பட்டிருக்கும் என்று  ஒரு நூலில் கூறப்பட்டிருந்தால் அது சட்டமாகும் (பார்க்க : பக்கம் 11.)

தகவல் என்றால் குறிப்பிட்ட ஒரு நிபந்தனைப்பிரகாரம் ஒரு சொல்லை குறிப்பிட்ட விதத்தில் எழுதப்பட வேண்டும், அல்லது எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று கூறாமல் இந்தச்சொற்களை இன்ன இன்ன இடங்களில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது. அதே சொற்களை மற்ற இடங்களில் வேறு விதமாக எழுதப்பட்டிருக்கிறது என்று ஒரு நூலில் தகவல் கூறப்பட்டிருந்தால் அதற்கு வெறும் தகவல் எனப்படும்.

உதாரணமாக  லுஅஃபாஉ  என்பது குர்ஆனில் 14:21, 40:47 ஆகிய இரு இடங்களில் ( الضعفعوا) இவ்வாறு எழுதப்பட்டிருக்கும். அதே  லுஅஃபாஉ என்பது குர்ஆனில் 2:266, 9.91 ஆகிய வசனங்களில் ( ضعفاء) இவ்வாறு எழுதப்பட்டிருக்கும் என்று மட்டும் ஒரு நூலில் கூறப்பட்டிருக்கிறது. 14:21, 40:47 ஆகிய இரு இடங்களில் ஏன் அவ்வாறு எழுதப்பட்டுள்ளது, 2:266, 9.91 ஆகிய வசனங்களில் ஏன் வேறு விதமாக எழுதப்பட்டுள்ளது என்றக் காரணத்தை அந்நூலில் கூறப்படவில்லையென்றால்  வெறும் தகவலை மட்டும் தான் அந்நூலில் கூறப்பட்டுள்ளது. சட்டத்தை கூறப்படவில்லை என்று நாம் கூறலாம்.

நாம் பி.ஜே.வுக்கு வெறும் தகவலை மட்டும் கூறவில்லை. மாறாக சட்டத்தையும், சட்ட நூலையும், குர்ஆனிலிருந்தே அச்சட்டத்திற்கேற்ப பல உதாரணங்களையும் பட்டியலிட்டுக் கூறினோம். எனவே சட்டத்திற்கும், தகவலுக்கும் மத்தியிலுள்ள வித்தியாசத்தைக் கூட விளங்காத பி.ஜே.வுக்கு குர்ஆனில் பிழை காண என்ன தகுதி இருக்கிறது ?

ஒரு நூலில் அதன் ஆசிரியர் ஸஹாபாக்கள் இச்சொல்லை இந்த நிபந்தனை இருந்தால் இவ்வாறு எழுதுவார்கள். இல்லையெனில் அவ்வாறு எழுதமாட்டார்கள் என்று தகவல் கூறினால் அங்கே ஸஹாபாக்களின் எழுத்து விதியைத்தான் அந்நூலாசிரியர் கூறியுள்ளார் என்பதை எல்.கே.ஜி. பிள்ளை கூட நன்கு விளங்குமே ! அதை பி.ஜே.யால் விளங்க முடியவில்லையென்றால் இத்தகைய குறுமதியுடைய பி.ஜே. குர்ஆனில் பிழை காண என்ன தகுதி இருக்கிறது ?

 

குர்ஆனை எழுதும் விதியை பி.ஜே. உருவாக்கலாமாம் :

ஆரம்ப காலத்து எழுத்து விதியை நீங்களாக உருவாக்கக்கூடாது என்று எங்களிடம் பி.ஜே. கூறினார். (ஆனால் ஆரம்ப காலத்து எழுத்து விதியை நாங்கள் உருவாக்கவில்லை என்பதற்கு பல நூற்களை ஆதாரமாகக்காட்டினோம்.) ஆனால் பி.ஜே. குர்ஆனை எழுதும் விதியை உருவாக்கலாமாம். குர்ஆனிலுள்ள ஒருச்சொல் குறிப்பிட்ட விதத்தில் எழுதப்பட்டிருப்பது எழுத்து விதியாக இருக்குமேயானால் அச்சொல் எல்லா இடத்திலும் அவ்வாறே எழுதப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு எழுதப்பட்டிருக்குமேயானால் அதை அவ்வாறு எழுதும் விதி இருக்கிறது, எழுதும் முறை இருக்கிறது என்று கூறலாம் என பி.ஜே. ஒரு புதிய விதியை உருவாக்கினார். இவ்வாறு அவராகவே உருவாக்கிய விதியைக் கொண்டுதான் குர்ஆனில் எழுத்துப்பிழை இருக்கிறது என்று கூறிக்கொண்டே இருந்தார்.

 

பி.ஜே. உருவாக்கிய எழுத்து விதியே அவரின் படுதோல்வியை நிர்ணயித்தது :

குர்ஆனிலுள்ள ஒருச்சொல் குறிப்பிட்ட விதத்தில் எழுதப்பட்டிருப்பது எழுத்து விதியாக இருக்குமேயானால் அச்சொல் எல்லா இடத்திலும் அவ்வாறே எழுதப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு எழுதப்பட்டிருக்குமேயானால் அதை அவ்வாறு எழுதும் விதி இருக்கிறது, எழுதும் முறை இருக்கிறது என்று கூறலாம் எனக்கூறுகிறீர்களே ! குர்ஆன் முழுவதும் வாவ் (و)-ல் முடிகிற லியர்புவ ( ليربوا), நப்லுவ ( ونبلوا), தப்லூ ( تبلوا) போன்ற வினைச்சொற்களின் கடைசியிலும் (பார்க்க: பக்-9,10), குர்ஆன் முழுவதும் வாவ் (و)-ல் முடிகிற அர்ரிபா (الربوا)  என்ற பெயர்ச்சொல்லின் கடைசியிலும் அலிஃப் கூடுதலாக எழுதப்பட்டிருப்பதால் வாவ் (و)-ல் முடிகிற வினைச்சொல்லிலும், பெயர்ச்சொல்லிலும் வாவ் (و)-க்கு அடுத்து அலிஃபை கூடுதலாக எழுதும் விதி இருக்கிறது என்றுதானே கூறவேண்டும் ?

அதே போல் குர்ஆன் முழுவதும் ஒரு வார்த்தையின் கடைசி ஓரத்தில்பேஷ் செய்யப்பட்டு இடம்பெற்றஹம்ஜா (ءُ)-வை வாவ் (و) ஆக எழுதப்பட்ட யப்தஉ ( يبدؤا), லாதல்மஉ ( لا تظمؤا), யஃ பஉ ( يعبؤا) போன்ற  அனைத்து வினைச்சொற்களின் கடைசியிலும் (பார்க்க:பக்11),  புரஆஉ ( برءؤا), லுஅஃபாஉ ( الضعفؤا), ஷுரகாஉ ( شركؤا) போன்ற அனைத்து பெயர்ச்சொல்லின் கடைசியிலும்(பார்க்க: பக்-12) வாவ் (و)-க்கு அடுத்து அலிஃப் கூடுதலாக எழுதப்பட்டிருப்பதால் ஒரு வார்த்தையின் கடைசி ஓரத்தில்பேஷ் செய்யப்பட்டு இடம்பெற்றஹம்ஜா (ءُ)-வை வாவ் (و) ஆக எழுதப்பட்ட வினைச்சொல்லிலும், பெயர்ச்சொல்லிலும் வாவ் (و)-க்கு அடுத்து அலிஃபை கூடுதலாக எழுதும் விதி இருக்கிறது என்றுதானே கூறவேண்டும் ?

நீங்கள் உருவாக்கிய எழுத்து விதிப்பிரகாரமே அவை சரியாகத்தான் எழுதப்பட்டிருக்கிறது என்று பி.ஜே.யிடம் நாம் கூறியதும் வாயடைக்கப்பட்டார் பி.ஜே. எனவே பி.ஜே. உருவாக்கிய எழுத்து விதியே அவரை படுதோல்வியடையச்செய்துவிட்டது.

 

வாய் திறக்க நடுங்கிய பி.ஜே.

யப்தஉ ( يبدؤا), லாதல்மஉ ( لا تظمؤا), யஃபஉ ( يعبؤا) போன்ற  அனைத்து வினைச்சொற்களின் கடைசியிலும் (பார்க்க:பக்11),  புரஆஉ ( برءؤا), லுஅஃபாஉ ( الضعفؤا), ஷுரகாஉ ( شركؤا) போன்ற அனைத்து பெயர்ச்சொல்லின் கடைசியிலும்(பார்க்க: பக்-12) ‘ ஹம்ஜா (ءُ)-வை வாவ் (و) ஆக எழுதப்பட்டிருந்தால் தான் அந்த வாவ் (و)-க்கு அடுத்து அலிஃபை கூடுதலாக எழுதவேண்டும். எந்த இடங்களில் கடைசி ஓரத்தில் இடம்பெற்ற ஹம்ஜாவை வாவ்-ஆக எழுதப்படாமல் ஹம்ஜாவாகவே எழுதப்பட்டிருக்குமோ அங்கு  அந்த ஹம்ஜாவிற்கு பின்பு ஒரு அலிஃபை கூடுதலாக எழுதக்கூடாது. அவ்வாறு குர்ஆனில் எழுதப்பட்டிருந்தால் அதை எடுத்துக்காட்டுங்கள் பார்ப்போம் என்றோம். விவாதத்தின் இறுதி வரை பி.ஜே. வாய் திறப்பதற்கு நடுங்கினார்.  

 

பி.ஜே. யின் அறியாமை – 7

குர்ஆனில்(15:78, 50:14) அல்ஐக்கத்( الايكة) என்ற சொல்லை 26:176, 38:14 ஆகிய வசனங்களில் ஆரம்பத்தில் அலிஃப் இல்லாமல் ( اصحب لئيكة) தவறாக எழுதப்பட்டுள்ளது என்று பி.ஜே. குழுவினர் அவர்களின் முட்டாள்தனத்தை வெளிப்படுத்தினர்.

தூ.டி... சபை சார்பில் அளிக்கப்பட்ட பதில்

அல்ஐக்கத்( الايكة) என்ற சொல் மத்யன் என்ற ஊருக்கு அருகிலுள்ள அடர்ந்த மரங்கள் நிறைந்த ஒரு ஊருக்குப்பெயராகும்.அந்த ஊருக்கு இரண்டு பெயர்கள் இருக்கின்றன.

 

1 :  அல்ஐக்கத்( الايكة)

2 : லைக்கத் ( ليكة)

குர்ஆனில் 15:78, 50:14 ஆகிய வசனங்களில் அல்ஐக்கத்( الايكة) என்ற கிராஅத் மட்டும்தான் இருக்கிறது. 26:176, 38:13 ஆகிய வசனங்களில் அல்ஐக்கத்( الايكة) என்றும், லைக்கத் ( ليكة) என்றும் இரு வகையான கிராஅத் இருக்கிறது.

·          تفسير الجلالين - (ج 7 / ص 107)

 

(كَذَّبَ أصحاب لْئَيْكَةِ } وفي قراءة بحذف الهمزة وإلقاء حركتها على اللام وفتح الهاء : هي غيضة شجر قرب مدين      (المرسلين)

 26:176 வசனத்தில் அல்ஐக்கத்( ) என்றும் ஓதப்படுகிறது. மேலும் அல்ஐக்கத்( الايكة)-ன் ஆரம்பத்திலுள்ள ஹம்ஸாவை போக்கி அதிலுள்ள ஜபரை லாமுக்கு கொடுத்து, மேலும் அல்ஐக்கத்( الايكة)-ன் கடைசியிலுள்ள குண்டு தா(ة )வுக்கு ஜபர் கொடுத்து லைக்கத ( ليكة

என்றும் ஒரு கிராஅத் இருக்கிறது. மேலும் அது மத்யன் என்ற ஊருக்கு அருகிலுள்ள அடர்ந்த மரங்கள் நிறைந்த ஒரு ஊருக்குப்பெயராகும் என்று இமாம் சுயூத்தி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (ஆதாரம் : தஃப்ஸீருல் ஜலாலைன் 7:107.) என்று தெளிவாக பதிலளித்தோம்.

·          تفسير البيضاوي - (ج 4 / ص 425)

·          كَذَّبَ أَصْحَابُ الْأَيْكَةِ الْمُرْسَلِينَ (176) إِذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ أَلَا تَتَّقُونَ 194)

·          (كَذَّبَ أصحاب لْئَيْكَةِ المرسلين } الأيكة غيضة تنبت ناعم الشجر يريد غيضة بقرب مدين تسكنها طائفة فبعث الله إليهن شعيباً كما بعثه إلى مدين وكان أجنبياً منهم فلذلك قال

·          (إِذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ أَلاَ تَتَّقُونَ } ولم يقل أخوهم شعيب . وقيل الأيكة شجرة ملتف وكان شجرهم الدوم وهو المقل ، وقرأ ابن كثير ونافع وابن عامر «ليكة» بحذف الهمزة وإبقاء حركتها على اللام وقرئت كذلك مفتوحة على أنها ليكة وهي اسم بلدتهم ، وإنما كتبت ها هنا وفي ص بغير ألف اتباعاً للفظ .

26:176 வசனத்தில் அல்ஐக்கத்( ) என்றும் ஓதப்படுகிறது. மேலும் அல்ஐக்கத்( الايكة)-ன் ஆரம்பத்திலுள்ள ஹம்ஸாவை போக்கி அதிலுள்ள ஜபரை லாமுக்கு கொடுத்து, மேலும் அல்ஐக்கத்( الايكة)-ன் கடைசியிலுள்ளகுண்டு தா”(ة )வுக்கு ஜபர் கொடுத்து லைக்கத ( ليكة)

என்று இப்னு கஸீர் அவர்களும், இமாம் நாஃபிவு அவர்களும், இமாம் இப்னு ஆமிர் அவர்களும் ஓதுகிறார்கள். 26:176 வசனத்திலும், சூரத்து ஸாத் (38:13 என்ற வசனத்தி)லும் ஒரே மாதிரியான உச்சரிப்பை பின்பற்றி ஆரம்ப அலிஃப் இல்லாமல் லைக்கத ( ليكة)என்றே எழுதப்பட்டுள்ளது என்று இமாம் பைளாவீ (ரஹ்) கூறுகிறார்கள். (ஆதாரம்: தஃப்ஸீருல் பைளாவீ 4:425)

வர்ஷ் (ரஹ்)அவர்கள் இமாம் நாஃபிவு (ரஹ்)வுடைய கிராஅத்தை ஓதக்கூடியவராகும். எனவே தான் வர்ஷ் (ரஹ்)வுடைய கிராஅத் முறையை சவூதி அரசாங்கம் அச்சிடும்பொழுது அக் குர்ஆன் பிரதியில் 26:176 வசனத்திலும், 38:13 வசனத்திலும் லைக்கத ( ليكة) என்றே எழுதி அச்சிட்டு வர்ஷ் (ரஹ்)வுடைய கிராஅத் முறையை ஓதி வருகிற மொராக்கோ போன்ற பகுதி மக்களுக்கு அனுப்புகின்றனர்..

இதோ அதற்குரிய ஆதாரம் :

·         

·          ------------------------------------------------***********------------------------********-----------------------------

          

 ----------------------*****----------------*****--------

ஆஸிம் (ரஹ்)வுடைய மாணவராகிய ஹஃப்ஸ் (ரஹ்) அவர்கள் 26:176 வசனத்திலும், 38:13 வசனத்திலும் அல்ஐக்கத் ( الايكة) என்றே ஓதுகிறார்கள். இந்தியப்பகுதியில் வாழ்கிற நாம் ஹஃப்ஸ் (ரஹ்) வுடைய கிராஅத்தை ஓதிவருவதால் ஹஃப்ஸ் (ரஹ்)வுடைய கிராஅத் முறையை சவூதி அரசாங்கம் அச்சிடும்பொழுது அக்குர்ஆன் பிரதியில் 26:176 வசனத்திலும், 38:13 வசனத்திலும் அல்ஐக்கத் ( الايكة) என்றே எழுதி அச்சிட்டு ஹஃப்ஸ்(ரஹ்)வுடைய கிராஅத் முறையை ஓதி வருகிற இந்தியா போன்ற பகுதி மக்களுக்கு அனுப்புகின்றனர்..

                எனவே 26:176, 38:13 ஆகிய வசனங்களில் மட்டும் நபி(ஸல்) அவர்களிடமிருந்து அல்ஐக்கத்( الايكة) என்பது இரு வகையாக ஓதும் விதத்தில் வந்துள்ளது. எனவேதான் அதை எழுதிய ஸஹாபாக்கள் அவ்விரண்டு இடத்தில் மட்டும் இரு வகையான கிராஅத்தையும் பேணி

அல்ஐக்கத் ( الايكة)-ன் ஆரம்பத்தில் அலிஃப் இல்லாமல் எழுதியுள்ளனர். அவ்வாறு எழுதினால் தான் அதை அல்ஐக்கத் ( الايكة) என்றும், லைக்கத ( ليكة) என்றும் ஓத முடியும். 

எனவே ஸஹாபாக்கள் மிகக்கவனமாகவும், மிகத்திறமையுடனும் எவ்வித பிழையுமின்றி சரியாகத்தான் எழுதியுள்ளனர் என்பது தெள்ளத்தெளிவாக நிரூபணமாகின்றது.

 

No comments:

Post a Comment