Sunday 21 April 2013

குத்பா



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

கண்ணியத்திற்குரிய உலமாப்பெருமக்களே! சங்கைக்குரிய இமாம்களே! தாங்களின் பள்ளிவாசலில் ஜும்ஆவுடைய நாளில் குத்பாவுக்கு முன்பு முஅத்தின் அவர்கள் ஜும்ஆவின் சிறப்பையும், குத்பாவின் பொழுது அமைதியாக இருப்பதின் அவசியத்தைப்பற்றியும் குறிப்பிடும் வழமையிருக்குமேயானால் அதைக் கீழ்கண்டவாறு ஆதாரப்பூர்வமாக தொகுக்கபட்ட விதத்தில்  ஓதுமாறு கூறும்படி தாங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

அல்லாஹ் நன்மைக்கு உதவி செய்வானாக! ஆமீன்!

بسم الله الرحمن الرحيم

يَا مَعْشرَ الْمُسْلِمِيْنَ اَلْجُمُعَةُ حَجُّ الْفُقَرَاءِ وَالْمَسَاكِيْنِ لِمَا رُوِيَ فِيْ مُسْنَدِ الشِّهَابِ عَنْ اِبْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : اَلْجُمُعَةُ حَجُّ الْفُقَرَاءِ . وَفِيْ رِوَايَةٍ عَنْهُ فِيْهِ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : اَلْجُمُعَةُ حَجُّ الْمَسَاكِيْنِ

وَيَا عِبَادَ اللّهِ اَلْجُمُعَةُ عِيْدُ الْمُسْلِمِيْنَ  لِمَا رُوِيَ فِيْ إبْنِ مَاجَة  عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ هَذَا يَوْمُ عِيدٍ جَعَلَهُ اللَّهُ لِلْمُسْلِمِينَ

وَيَا عِبَادَ اللّهِ اَلْخُطْبَتَانِ فِيْهَا تَقُوْمَانِ مَكَانَ الرَّكْعَتَيْنِ مِنَ الْفَرْضِ لِمَا رُوِيَ فِيْ إبْنِ أبِيْ شَيْبَةَ  عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ أَنَّهُ قَالَ إنَّمَا جُعِلَتِ الْخُطْبَةُ مَكَانَ الرَّكْعَتَيْنِ فَإنْ لَمْ يُدْرِكِ الْخُطْبَةَ فَلْيُصَلِّ اَرْبَعًا

وَيَا عِبَادَ الرَّحْمنِ  إذَا صَعِدَ الْخَطِيْبُ عَلَى الْمِنْبَرِ فَلاَ يَتَكَلَّمَنَّ أحَدٌ فَمَنْ تَكَلَّمَ فَقَدْ لَغَا وَمَنْ لَغَا فَلاَ جُمُعَةَ لَهُ لِمَا رُوِيَ فِيْ التِّرْمِذِيْ  عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَالَ يَوْمَ الْجُمُعَةِ وَالْإِمَامُ يَخْطُبُ أَنْصِتْ فَقَدْ لَغَا وَفِيْ  رِوَايَةِ أبِيْ دَاؤُدَ عَنْ عَلِيٍّ قَالَ : وَمَنْ لَغَا فَلَيْسَ لَهُ فِي جُمُعَتِهِ تِلْكَ شَيْءٌ ثُمَّ يَقُولُ فِي آخِرِ ذَلِكَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ ذَلِكَ

فَيَا مَعْشَرَ الْمُسْلِمِيْنَ والْمُؤْمِنِيْنَ أجْمَعِيْنَ فَاسْمَعُوْا وأَنْصِتُوْا خَيْرٌ لَّكُمْ وَاسْتَغْفِرُوْهُ إِنَّهُ هَوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! ஜும்ஆவுடைய நாள் ஏழைகளுக்கும், மிஸ்கீன்களுக்கும் ஹஜ்ஜாகவும், எல்லா முஸ்லிம்களுக்கும் பெருநாளாகவும் இருக்கின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மேலும் அதிலுள்ள இரண்டு குத்பாக்கள் ஃபர்ளான இரண்டு ரக்அத்துகளின் அந்தஸ்தில் இருக்கிறது என உமர் (ரளி) அவர்கள் கூறியுள்ளார்கள்.  எனவே குத்பா ஓதும் பொழுது யாரும் பேசவேண்டாம். மீறி பேசினால் அவரின் குத்பாவின் பலனை அவர் வீணடித்துவிடுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். மேலும் யார் குத்பாவின் பலனை வீணடித்தாரோ அவருக்கு அந்த ஜும்ஆவுடைய முழு பலனும் கிடைக்காது என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலீ (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். எனவே குத்பாவை காது தாழ்த்திக் கேளுங்கள். மவுனமாக இருங்கள். அதுவே உங்களுக்கு மிகச்சிறந்ததாகும்.  

 

 

No comments:

Post a Comment