Wednesday, 25 December 2013

சுவனத்தையும் விட்டு வைக்காத த.த.ஜ.வின் அசிங்கம்சுவனத்தில் ஹோமோ செக்ஸ் கிடையாது.

சுவனத்தில் ஹோமோ செக்ஸ் கிடையாது என்று ஹனஃபீ மத்ஹப் நூலில் கூறப்பட்டுள்ளது. இச்சட்டம் எதனால் கூறப்பட்டது என்ற காரணத்தை இருட்டடிப்புச் செய்துவிட்டு வஹ்ஹாபிகள் பின்வருமாறு மத்ஹப் நூலையும், மத்ஹப் இமாம்களையும் கொச்சைப் படுத்தியுள்ளனர்.

சுவனத்தில் ஹோமோ செக்ஸா ?

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (4/ 28)

وَلَا تَكُونُ) اللِّوَاطَةُ (فِي الْجَنَّةِ عَلَى الصَّحِيحِ) لِأَنَّهُ تَعَالَى اسْتَقْبَحَهَا وَسَمَّاهَا خَبِيثَةً، وَالْجَنَّةُ مُنَزَّهَةٌ عَنْهَا )

சரியான கருத்துப்படி சுவனத்தில் ஆணுக்கு ஆண் உறவு கொள்தல் இல்லை. ஏனெனில் அல்லாஹ் அதை அருவருக்கத் தக்கதாக ஆக்கி, அதை அசிங்கம் என்று குறிப்பிடுகின்றான். சுவனம் இத்தகைய அசிங்கத்தை விட்டும் தூய்மையாக்கப் பட்டதாகும்.

நூல் : துர்ருல் முக்தார், பாகம் 4, பக்கம் 28

நல்லடியார்களுக்குப் பரிசாக வழங்கும் சுவனத்தைப் பற்றிக் கூறும் போதும் இந்த  மத்ஹபு நூலாசிரியர்கள் தங்கள் வக்கிர புத்தியை விடவில்லை. சொர்க்கத்தில் ஹோமோ செக்ஸ் உண்டா ? என்ற ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் என்ன ? இந்த உலகத்தில் அதில் ஆர்வம் உள்ளவர்கள் தான் மறுமையில் அதற்கு அனுமதி உண்டா ? என்று ஆய்வு செய்வார்கள். மத்ஹபு நூலாசிரியர்களின் அற்பப் புத்தியிலிருந்து சுவனம் கூட தப்பவில்லை. பார்க்க : ஏகத்துவம், நவம்பர் 2005, பக்கம் 46.

நமது பதில் :

யாருக்கு வக்கிர புத்தி இருக்கிறது? மதஹபு இமாம்களுக்கா? அல்லது வஹ்ஹாபிகளுக்காக? என்பதை இப்பொழுது நாம் பார்ப்போம்.

சுவனத்தில் ஹோமோ செக்ஸ் கிடையாது என்று ஹனஃபீ மத்ஹப் நூலில் எதனால் கூறப்பட்டுள்ளது? என்ற காரணத்தை இருட்டடிப்புச் செய்துவிட்டு வஹ்ஹாபிகள் மேற்கண்டவாறு மத்ஹப் நூலையும், மத்ஹப் இமாம்களையும் கொச்சைப் படுத்தியுள்ளனர். ஆனால் அதற்குரிய காரணத்தை துர்ருல் முக்தார் என்ற நூலின் விளக்கவுரை நூலான ரத்துக் முஹ்தார் என்ற நூலில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதுவும் அச்சட்டத்திற்கு அடியிலேயே கூறப்பட்டுள்ளது.  

இதோ அக்காரணத்தை நன்கு பாருங்கள்.

الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (4/ 28)

وَلَا تَكُونُ) اللِّوَاطَةُ (فِي الْجَنَّةِ عَلَى الصَّحِيحِ) لِأَنَّهُ تَعَالَى اسْتَقْبَحَهَا وَسَمَّاهَا خَبِيثَةً، وَالْجَنَّةُ مُنَزَّهَةٌ عَنْهَا )

ـــــــــــــــــــــــــــــ

[رد المحتار]

مَطْلَبٌ لَا تَكُونُ اللِّوَاطَةُ فِي الْجَنَّةِ (قَوْلُهُ وَلَا تَكُونُ اللِّوَاطَةُ فِي الْجَنَّةِ)

قَالَ السُّيُوطِيّ: قَالَ ابْنُ عَقِيلٍ الْحَنْبَلِيُّ: جَرَتْ مَسْأَلَةٌ بَيْنَ أَبِي عَلِيِّ بْنِ الْوَلِيدِ الْمُعْتَزِلِيِّ وَبَيْنَ أَبِي يُوسُفَ الْقَزْوِينِيِّ فِي ذَلِكَ

فَقَالَ ابْنُ الْوَلِيدِ: لَا يُمْنَعُ أَنْ يُجْعَلَ ذَلِكَ مِنْ جُمْلَةِ اللَّذَّاتِ فِي الْجَنَّةِ لِزَوَالِ الْمَفْسَدَةِ؛ لِأَنَّهُ إنَّمَا مُنِعَ فِي الدُّنْيَا لِمَا فِيهِ مِنْ قَطْعِ النَّسْلِ وَكَوْنِهِ مَحِلًّا لِلْأَذَى وَلَيْسَ فِي الْجَنَّةِ ذَلِكَ، وَلِهَذَا أُبِيحَ شُرْبُ الْخَمْرِ لِمَا لَيْسَ فِيهِ مِنْ السُّكْرِ وَغَايَةِ الْعَرْبَدَةِ وَزَوَالِ الْعَقْلِ فَلِذَلِكَ لَمْ يُمْنَعْ مِنْ الِالْتِذَاذِ بِهَا

فَقَالَ أَبُو يُوسُفَ: الْمَيْلُ إلَى الذُّكُورِ عَاهَةٌ، وَهُوَ قَبِيحٌ فِي نَفْسِهِ؛ لِأَنَّهُ مَحِلٌّ لَمْ يُخْلَقْ لِلْوَطْءِ، وَلِهَذَا لَمْ يُبَحْ فِي شَرِيعَةٍ، بِخِلَافِ الْخَمْرِ وَهُوَ مَخْرَجُ الْحَدَثِ وَالْجَنَّةُ نُزِّهَتْ عَنْ الْعَاهَاتِ. فَقَالَ ابْنُ الْوَلِيدِ: الْعَاهَةُ هِيَ التَّلْوِيثُ بِالْأَذَى، فَإِذَنْ لَمْ يَبْقَ إلَّا مُجَرَّدُ الِالْتِذَاذِ اهـ

 

சுவனத்தில் ஹோமோ செக்ஸ் கிடையாது என்று கூறியதன் நோக்கம் :

 

முஃதசிலிய்யா என்ற வழிகெட்டக் கொள்கையைச் சேர்ந்த அபூ அலீ இப்னுல் வலீத் என்பவர் கூறினார் : (சுவனத்தில்) கெடுதி என்பது நீங்கிவிடுகிற காரணத்தினால் ஹோமோ செக்ஸ் என்பது சுவனத்தில் உள்ள இன்பங்களின் பட்டியலில் ஆக்கப்படுவதை தடுக்கப்படாது. ஏனெனில் ஹோமோ செக்ஸிலே வம்சம் விரித்தியடைவது இல்லாத காரணத்தினாலும், மேலும் அது நோவினைக்குரிய இடமாக இருக்கின்ற காரணத்தினாலும் தான் ஹோமோ செக்ஸ் என்பது இந்த உலகில் தடுக்கப்பட்டது. வம்சம் விரித்தியடைதல் என்பதும், நோவினையும் சுவனத்தில் இல்லை. (எனவே ஹோமோ செக்ஸ் சுவனத்தில் உண்டு.) மேலும் இதனால் தான் (சுவனத்தில்) மது குடிப்பதை ஆகுமாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சுவனத்தில் உள்ள மதுவில் போதை மற்றும் உச்சகட்டமான சண்டை சச்சரவு செய்தல், பகுத்தறிவு நீங்குதல் ஆகியவைகள் கிடையாது. அதனாலத்தான் (சுவனத்தில்) அதைக்கொண்டு இன்பமடைவதை தடுக்கப்படவில்லை என்று கூறினார்.

(அதற்கு மறுப்பாக) அபூ யூசுஃப் (ரஹ்) அவர்கள் பின் வருமாறு கூறினார்கள் : ஒரு ஆண் இன்னொரு ஆணின் பக்கம் ஆசை கொள்வது கெடுதியாகும். மேலும் அது யதார்த்தத்திலேயே அசிங்கமாகும். ஏனெனில் அது (பின் துவாரம்) உறவு கொள்வதற்காக படைக்கப்படாத இடமாகும். இதனால் தான் எந்த மார்க்கத்திலும் ஓரினச்சேர்க்கை ஆகுமாக்கப்படவில்லை. மதுவிற்கு மாற்றமாக. மேலும் அது (பின்துவாரம்) மலம் வெளியாகும் இடமாகும். (அதில் உறவு கொள்வது அசிங்கமாகும்.) மேலும் சுவனம் கெடுதிகளைவிட்டும் (அசிங்கங்களை விட்டும்) தூய்மையாக்கப்பட்டதாகும் என்று அபூ யூசுஃப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.   

இவ்வாறு, இது விஷயமாக முஃதசிலிய்யா என்ற வழிகெட்டக் கொள்கையைச் சேர்ந்த அபூ அலீ இப்னுல் வலீத் என்பவருக்கும், அபூ யூசுஃப் அல்கஸ்வீனி (ரஹ்) அவர்களுக்கும் மத்தியில் ஒரு பிரச்சனை நடைபெற்றது என்று இப்னு அக்கீல் ஹம்பலீ (ரஹ்) அவர்கள் கூறியதாக இமாம் சுயூத்தி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : துர்ருல் முக்தார் என்ற நூலின் விளக்கவுரை நூலான ரத்துக் முஹ்தார், பாகம் 4, பக்கம் 28.

முஃதசிலிய்யா என்ற வழிகெட்டக் கொள்கையைச் சேர்ந்த அபூ அலீ இப்னுல் வலீத் என்பவர் சுவனத்தில் ஹோமோ செக்ஸ் உண்டு என்ற அசிங்கமான சட்டத்தைக் கூறி மக்களை வழிகெடுத்த காரணத்தினால் அவனுக்கு மறுப்பு கொடுத்து சரியான கருத்துப்படி சுவனத்தில் ஆணுக்கு ஆண் உறவு கொள்தல் இல்லை. ஏனெனில் அல்லாஹ் அதை அருவருக்கத் தக்கதாக ஆக்கி, அதை அசிங்கம் என்று குறிப்பிடுகின்றான். சுவனம் இத்தகைய அசிங்கத்தை விட்டும் தூய்மையாக்கப்பட்டதாகும்என்று கூறியுள்ளார்கள்.

முஃதசிலிய்யா என்ற வழிகெட்டக் கொள்கையைச் சேர்ந்த அபூ அலீ இப்னுல் வலீத் என்பவர் சுவனத்தில் ஹோமோ செக்ஸ் உண்டு என்று கூறியதை இருட்டடிப்புச் செய்துவிட்டு இப்னுல் வலீதுக்கு மறுப்பாகச் சொல்லப்பட்ட மார்க்க சட்டத்தை மட்டும் எடுத்துக்கூறி சொர்க்கத்தில் ஹோமோ செக்ஸ் உண்டா ? என்ற ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் என்ன ? இந்த உலகத்தில் அதில் ஆர்வம் உள்ளவர்கள் தான் மறுமையில் அதற்கு அனுமதி உண்டா ? என்று ஆய்வு செய்வார்கள். மத்ஹபு நூலாசிரியர்களின் அற்பப் புத்தியிலிருந்து சுவனம் கூட தப்பவில்லைஎன்று வஹ்ஹாபிகள் விமர்சித்துள்ளனர்.

இவர்கள் யோக்கியவான்களாக இருந்தால் இப்னுல் வலீதின் கூற்றை எடுத்துக் கூறி அவரைத் தான் விமர்சித்திருக்க வேண்டும். ஆனால் சுவனத்தில் ஹோமோ செக்ஸ் உண்டு என்று கூறியவனை விமர்சிப்பதை விட்டு விட்டு, அவனின் கூற்றையும் இருட்டடிப்புச் செய்துவிட்டு, ‘சுவனத்தில் ஹோமோ செக்ஸ் கிடையாது, அது அசிங்கம், சுவனம் இது போன்ற அசிங்கத்தை விட்டும் சுத்தமானதுஎன்று சொன்ன மத்ஹப் இமாம்களை இவர்கள் விமர்சித்துள்ளார்கள் என்றால் மத்ஹப் மீதும், மத்ஹப் இமாம்கள் மீதும் இவர்களுக்குள்ள காழ்ப்புணர்ச்சியை அது காட்டுகிறது.

 

சுவனத்தில் ஹோமோ செக்ஸ் உண்டு என்று கூறிய வழிகேடன் இப்னுல் வலீதை ... ஏன் விமர்சிக்கவில்லை ?

அதற்கு மிக முக்கியமான காரணம் உண்டு. ஏனெனில் இவர்கள் ஹோமோ செக்ஸ் விரும்பியான இப்னுல் வலீத் உடைய வாரிசுகளாகும். சுவனத்தில் ஹோமோ செக்ஸ் உண்டு என்று கூறி இஸ்லாத்தையும், சுவனத்தையும் இப்னுல் வலீத் அசிங்கப்படுத்தியதைப் போல் இவர்களும் ஒரு அசிங்கமான சட்டத்தைக் கூறி இஸ்லாத்தையும், சுவனத்தையும் அசிங்கப்படுத்தியுள்ளார்கள்.

வழிகெட்ட முஃதசிலா கொள்கையைச் சேர்ந்த இப்னுல் வலீதின் அற்பப் புத்தியிலிருந்து சுவனம் கூட எப்படி தப்பவில்லையோ அது போல் வழிகெட்ட ... இயக்கத்தின் நிறுவனரான பி.ஜே.யின் புத்தியிலிருந்து சுவனம் கூட தப்பவில்லை.

... பி.ஜே.யின் அந்த அசிங்கமான சட்டம் என்னவெனில் ; சுவனத்தில் ஒரு ஆணுக்கு பல பெண் ஹூருல் ஈன் கிடைப்பது போல ஒரு பெண்ணுக்கு பல் ஆண் ஹூருல் ஈன் கிடைக்கும் என்று பி.ஜே. கூறியுள்ளார்.

அதாவது சுவனத்தில் ஒரு பெண்ணுக்கு பல கணவன்மார்கள் உண்டு என்ற அசிங்கமான சட்டத்தை குர்ஆன், ஹதீஸின் எவ்வித ஆதாரமுமின்றி அவரது லாஜிக்கின் மூலம் கூறியுள்ளார். இப்னுல் வலீத் அவரது லாஜிக் பிரகாரம்   சுவனத்தில் ஹோமோ செக்ஸ் உண்டு என்ற அசிங்கமான சட்டத்தை கூறியதை போல.

 

சுவனத்தில் ஒரு பெண்ணுக்கு பல கணவன்மார்களா ?

 

பி.ஜே. கூறுகிறார் : சொர்க்கத்தில் தூய்மையான் துணைகள் உள்ளனர் என்று திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் கூறுகின்றது. சில இடங்களில் பெண் துணைகள் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. அப்படியானால் நல்லறம் செய்த பெண்களுக்கு ஆண் துணைகள் இல்லையா என்று கேள்வி எழும். …………..

(இறைவன் திருக்குர்ஆனில்) அனைத்துக் கட்டளைகளையும், அறிவுரைகளையும் ஆண்களைக் குறிக்கும் வகையில் பேசிவிட்டுஆண்களுக்கு சொன்ன அனைத்தும் பெண்களுக்கும் உள்ளனஎன்று ஒன்று இரண்டு வசனங்களில் மட்டும் கூறிவிடுவான்.

நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே பெண்கள் இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டனர். ‘ஆண்களைப் பற்றித்தானே திருக்குர்ஆன் கூறுகிறது. பெண்களைப் பற்றிக் கூறுவது இல்லையே ஏன்? என்று உம்மு ஸலமா (ரலி) கேட்டபோது திருக்குர்ஆனின் 33/35 வசனம் அருளப்பட்டது.  (நூல் : அஹ்மத் 25363)

இவ்வசனத்தில் (33/35) ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் சமமான தக்க பரிசுகள் உண்டு எனக்கூறப்படுகிறது. அதாவது ஆண்களுக்கு கூறப்படும் அனைத்தும் பெண்களுக்கும் உண்டு என்ற கருத்தில் இவ்வசனம் அமைந்துள்ளது.

4/124 வசனத்தில் நல்லறம் செய்தோ ஆணோ, பெண்ணோ அணுவளவும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள் எனக்கூறப்படுகிறது. இதே போன்ற கருத்தில் திருக்குர்ஆனின் 3/195, 4/124. 16/97, 40/40 ஆகிய வசனங்களும் அமைந்துள்ளன.

ஆண்களும் பெண்களும் இறைவனுக்கு அஞ்சி நல்லறங்கள் செய்திருக்கும் போது ஆண்களுக்கு மட்டும் கூடுதல் பரிசுகள் வழங்குவது அநீதியாகும்.

மறுமையி பரிசு வழங்கும் போதுஅனைவரும் அதில் திருப்தி அடைவார்கள்என்று அல்லாஹ் கூறுகின்றான். அனைவரும் என்பதில் ஆண்களைப் போலவே பெண்களும் அடங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.  (பார்க்க: திருக்குர்ஆன் : 5/119, 9/100, 22/59, 58/22, 88/9, 98/8)

எனவே அல்லாஹ் ஆண்களுக்கு மட்டும் துணைவிகளைக் கொடுத்துவிட்டு, பெண்களுக்கு துணையில்லாமல் விடமாட்டான். ………

எத்தனையோ கட்டளைகள் ஆண்களை மட்டும் குறிக்கும் வகையில் இருந்தாலும் அக்கட்டளைகள் பெண்களையும் குறிக்கும் என்று மேற்கண்ட வசனங்களை சான்றாகக் கொண்டு அறிந்துகொள்கிறோம்.

அது போல்தான் சொர்க்கத்தில் கிடைக்கும் ஜோடிகள் குறித்தும் ஆண்பாலாக கூறப்பட்டுள்ளது. அதுவும் பெண்பாலுக்கும் பொருந்தும் என்று அதே வசனங்களைச் சான்றாகக் கொண்டு முடிவு செய்வதே ஏற்புடையதாகும். இறைவனின் நீதிக்கு உகந்ததாகும்.

(பி.ஜே. தர்ஜமா, 8 வது பதிப்பு, பக்கம் 1087, 1088, 1089)

 

நமது பதில் :

ஆண்களுக்கு வழங்கப்பட்ட தனிச்சிறப்பை பெண்களுக்கு எல்லா விஷயங்களிலும் ஒப்பிடுவது முட்டாள் தனமாகும்.

உதாரணமாக : ஒரு ஆண் ஒரே சமயத்தில் பல (4) பெண்களுடன் திருமண உறவில் வாழலாம் என்று அல்லாஹ் சட்டமாக்கியுள்ளான். இச்சட்டத்தை பெண்ணுக்குப் பொருத்தி ஒரு பெண் ஒரே சமயத்தில் பல (4) ஆண்களுடன் திருமண உறவில் வாழலாம் என்று தீர்ப்பளிக்கக் கூடாது. ஏனெனில் ஆண்களுக்கு அது அசிங்கம் இல்லை என்றும், பெண்களுக்கு அது அசிங்கம் என்றும் மார்க்கம் முடிவு செய்துவிட்டது. எனவே தான் ஒரு பெண்ணுக்கு பல ஆண் என்ற ஒரு முறையை அல்லாஹ் எந்த மார்க்கத்திலும் அனுமதிக்கவில்லை. ஓரினச்சேர்க்கையைப் போல. எனவே ஒரு பெண்ணுக்கு பல ஆண் என்ற இந்த அசிங்கம் சுவனத்தில் எப்படி ஆகுமாக்கப்படும். சுவனம் இது போன்ற அசிங்கங்களை விட்டும் பாதுகாக்கப்பட்டதாகும்.

எனவே இறைவனுக்கே எது நீதம், எது அநீதம் என்றப் பாடத்தை நடத்துவதை  வஹ்ஹாபிகள் நிறுத்திக்கொள்ளட்டும்.

قُلْ أَتُعَلِّمُونَ اللَّهَ بِدِينِكُمْ وَاللَّهُ يَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ (16) [الحجرات 49: 16]

(நபியே!) நீங்கள் கூறுங்கள் : அல்லாஹ்வுக்கே உங்களுடைய மார்க்கத்தை நீங்கள் கற்றுக் கொடுக்கின்றீர்களா? வானங்களில் உள்ளவற்றையும், பூமியிலுள்ளவற்றையும் அல்லாஹ் நன்கு அறிவான். மேலும் அல்லாஹ் எல்லா விஷயத்தையும் நன்கு அறியக்கூடியவனாக இருக்கின்றான்.  (அல்குர்ஆன் 49/16)

 

த.த.ஜ. வின் பாணியில் த.த.ஜ. வுக்குப் பதில்

 

நல்லடியார்களுக்குப் பரிசாக வழங்கும் சுவனத்தைப் பற்றிக் கூறும் போதும் இந்த  த.த.ஜ. வழிகேடர்கள் தங்கள் வக்கிர புத்தியை விடவில்லை. சொர்க்கத்தில் ஒரு பெண்ணுக்கு பல கணவன்கள் உண்டு என்று ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் என்ன ? இந்த உலகத்தில் அதில் ஆர்வம் உள்ளவர்கள் தான் மறுமையில் அதற்கு அனுமதி உண்டா ? என்று ஆய்வு செய்வார்கள். த.த.ஜ.வின் அற்பப் புத்தியிலிருந்து சுவனம் கூட தப்பவில்லை.

 

 

No comments:

Post a Comment