Wednesday, 4 December 2013

பிஜே தர்ஜமாவை ஏன் எறிக்க வேண்டும்பி.ஜே. தர்ஜமாவை ஏன் எறிக்க வேண்டும்?


நாளுக்கு நாள் வஹ்ஹாபிகளின் கொள்கைகள் மிகவும் விஷம் நிறைந்ததாக மாறிக்கொண்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக; தூய்மையான அக்கீதா எனும் மார்க்க கொள்கை விஷயங்களில் இந்த வஹ்ஹாபிகள் துர்நாற்றமுள்ள சாக்கடையை கலக்க முயற்சித்து, அவர்களின் கொள்கை சகோதரர்களிடத்தில் அம்முயற்சியில் வெற்றியும் கண்டுள்ளனர்.

எனவே அதே சாக்கடையை நமது சுன்னத் வல் ஜமாஅத் மக்களின் தூய்மையான கொள்கைகளிலும் கலக்க அதிக முயற்சி செய்து வருகின்றனர். எனவே அவர்களின் துர்நாற்றம் நிறைந்த, விஷவாயு நிறைந்த கொள்கைகளின் நாற்றத்தையும், விஷத்தன்மைகளையும் மறைப்பதற்காக சுன்னத் வல் ஜமாஅத் அறிஞர்களில் மிகவும், மதிப்பும், மரியாதையும் மிக்க பல அறிஞர்களை குறை கூறியும், அந்த அறிஞர்கள் எழுதிய நல்ல நூற்களை கேவலமாக விமர்சித்தும் வருகின்றனர்.

அந்த அடிப்படையில் சமீப காலமாககல்விக் கடல் இமாம் கஸ்ஸாலீ (ரஹ்) அவர்களை முஷ்ரிக் என்றும், அவர்கள் எழுதிய நூல்கள் அனைத்தும் ஷிர்க்கும், குஃப்ரும் நிறைந்தவை என்றும், இமாம் கஸ்ஸாலியை ஏற்பவர்களும், அவர்களின் நூற்களை ஏற்பவர்களும் முஷ்ரிக் என்றும் வஹ்ஹாபிகள் அவர்களின் எழுத்தின் மூலமாகவும், பேச்சின் மூலமாகவும் விஷமப் பிரச்சாரத்தைப் பரப்பி வருகின்றனர்.

இவ்வாறு அவதூறு பரப்புவதின் மூலம் அவர்களுடைய துர்நாற்றமும், விஷவாயுக்களும் நிறைந்த வழிகெட்ட கொள்கைகளை மறைத்து விடலாம் என தப்புக் கணக்குப் போட்டுள்ளனர்.

என்ன தான் துர்நாற்றத்தை மறைக்க நறுமணம் பூசினாலும் நாற்றம் வெளியாகாமல் இருக்குமா?

எனவே வஹ்ஹாபிகள் தான் முஷ்ரிக்குகள், அவர்களின் நூற்களில் தான் ஷிர்க்கும், குஃப்ரும் நிறைந்து வலிந்தோடுகிறது, எனவே அவர்களின் நூற்கள் தான் எரிக்கப்பட வேண்டும் என்பதை நாம் நன்கு அறிய வேண்டும் என்பதற்காக பி.ஜே.யின் தர்ஜமாவிலுள்ள ஈமானை அழிக்கக்கூடிய சில விஷக் கருத்துக்களை மட்டும் கூறயிருக்கின்றேன். அதை வைத்து அவரின் தர்ஜமாவின் விஷத்தன்மையை நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

மேலும் எனது இக்கட்டுரைக்கு பிஜே.யின் தர்ஜமாவை ஏன் எறிக்க வேண்டும்?’ என்று தலைப்பிட்டுள்ளேன்.

பி.ஜே. குர்ஆனிலுள்ள முதஷாபிஹாத் எனும் வகையைச் சார்ந்த வசனங்களில் கட்டுப்பட்ட அலிஃப், லாம், மீம் போன்ற தனித்தனி எழுத்துக்களை மடக்கவிஞர்களின் தரம் கெட்ட கவிதைக்கு ஒப்பிட்டுள்ளார். அதில் என்னென்ன விஷமக் கருத்துகள் மறைந்துள்ளன என்பதை இப்பொழுது நான் தெளிவுபடுத்த இருக்கின்றேன்.

அதற்கு முன்பாக முதஷாபிஹாத் என்றால் என்ன என்பதை சுருக்கமாக விவரித்துவிடுகிறேன்.

 


முதஷாபிஹாத் என்றால் என்ன?

குர்ஆனின் சில அத்தியாயங்களின் துவக்கத்தில் தனித்தனி எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக; அலிஃப் லாம் மீம், ( الم ) அலிஃப் லாம் மீம் ஸாத்,  ( المص )  அலிஃப் லாம் ரா, ( الر ) அலிஃப் லாம் மீம் ரா ( المر ). இந்த வசனங்களுக்கு பொருள் உண்டு. ஆனால் அதை நம்மால் விளங்கிக் கொள்ளமுடியாது. அல்லாஹ் மற்றும் அவனின் தூதர் (ஸல்) அவர்கள் மட்டும் தான் அவற்றின் பொருளை விளங்கியுள்ளார்கள். இது போன்ற வசனங்களுக்கு முதஷாபிஹாத் என்று கூறப்படும்.

هُوَ الَّذِي أَنْزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آَيَاتٌ مُحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آَمَنَّا بِهِ كُلٌّ مِنْ عِنْدِ رَبِّنَا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ (7) رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ (8)  [آل عمران 7-8] 

அவன் தான் இவ்வேதத்தை உம் மீது இறக்கினான். இதில் தீர்க்கமான வசனங்களும், இருக்கின்றன. அவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை முதஷாபிஹாத் (என்னும் சரியான பொருளை விளங்கமுடியாத வசனங்கள்) ஆகும். எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹாத் வசனங்களுக்கு (தவறான) விளக்கத்தை தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத்தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். (மார்க்க) கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம் என்று கூறுவார்கள். அறிவுடையோரைத்தவிர மற்றவர்கள் இதைக் கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.  (அல்குர்ஆன் 3/7)

குர்ஆனில் முதஷாபிஹாத் எனும் வசனங்கள் உள்ளன. அவற்றின் உண்மையான விளக்கத்தை அல்லாஹ் தான் அறிவான் என்று கூறியதிலிருந்து முதஷாபிஹாத் வசனங்களின் உண்மையான விளக்கத்தை அல்லாஹ் மற்றும் அவனின் தூதர் (ஸல்) அவர்களைத்தவிர உலகில் வேறு யாரும் விளங்கிக்கொள்ளமுடியாது என்பது நிரூபணமாகின்றது.

முதஷாபிஹாத் வசனங்கள் இரு வகைப்படும்.

1 – அதன் பொருளை அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களைத்தவிர மற்ற யாராலும் விளங்க முடியாது.

உதாரணமாக; குர்ஆனின் சில அத்தியாயங்களின் துவக்கத்தில் தனித்தனி எழுத்துக்களாக இடம் பெற்ற அலிஃப் லாம் மீம், ( الم ) அலிஃப் லாம் மீம் ஸாத்,  ( المص )  அலிஃப் லாம் ரா, ( الر ) அலிஃப் லாம் மீம் ரா ( المر ) போன்ற வசனங்கள்.

2 – அதன் பொருளை நம்மால் விளங்க முடியும். ஆனால் அதன் உண்மையான விளக்கத்தை அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களைத் தவிர மற்ற எவராலும் விளங்க முடியாது.

உதாரணமாக; அல்லாஹ்வுக்கு உருவம் கிடையாது என்பது தான் இஸ்லாத்தின் உண்மையான கொள்கையாகும். எனினும் குர்ஆனில் அல்லாஹ்வுடய முகம், அல்லாஹ்வுடைய கை, அல்லாஹ்வுடைய கண் என்று கூறப்பட்டவைகள் அனைத்திற்கும் சரியான விளக்கத்தை அல்லாஹ்வும், அவனுடைய தூதர் (ஸல்) அவர்களும் தான் நன்கு அறிவார்கள்.

குர்ஆன்  என்ன  தரம்  கெட்ட  கவிதையா ?


ஆனால் திருக்குர்ஆனின் சில அத்தியாயங்களின் துவக்கத்தில் இடம்பெற்ற தனித்தனி எழுத்துக்களுக்கு அர்த்தம் கிடையாது என்றும், அரபுக்கவிஞர்கள் கவிகள் பாடும் போது அதன் துவக்கத்தில் அர்த்தமில்லாத ஓரிரு எழுத்துக்களை பயன்படுத்தி வந்தனர். எனவே அல்லாஹ்வும் அது போல் அர்த்தமில்லாத சில தனித்தனி எழுத்துக்களை சில அத்தியாயங்களின் துவக்கத்தில் பயன்படுத்தியுள்ளான் என்றும் பி.ஜே. கூறியுள்ளார்.

இதோ பி.ஜே. யின் கூற்றை நீங்களே நன்கு பாருங்கள்.

திருக்குர்ஆனில் சில அத்தியாயங்களின் துவக்கத்தில் தனித்தனி எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன. தனித்தனி எழுத்துக்களுக்கு எந்த மொழியிலும் பொருள் செய்ய முடியாது என்பதை நாம் அறிவோம். உதாரணமாக sun (சன்) எனக் கூறினால் இதற்குப் பொருள் கூற முடியும். S.u.n. (எஸ். யூ. என்.) எனத்தனித்தனியாகக் கூறினால் மூன்று எழுத்துக்களைக் கூறினோம் என்பதைத் தவிர இதற்கு எந்த அர்த்தமும் இருக்காது.

இது போலவே அரபு மொழியில் அலம ( اَلَمَ ) என்று கூறினால் இதற்கு பொருள் கூற முடியும். அலிஃப், லாம், மீம்என அச்சொல்லின் எழுத்துக்களைத் தனித்தனியாகக் கூறினால் அரபு மொழியில் உள்ள மூன்று எழுத்துக்களைக் கூறினோம் என்பதைத்தவிர வேறு எந்த அர்த்தமும் இதற்கு இருக்காது.

இது போல் பொருள் செய்ய முடியாத வகையில் எழுத்துக்களைக்கொண்டு ஆரம்பமாகும் 29 அத்தியாயங்கள் திருக்குர்ஆனில் உள்ளன. அவையாவன;

 2, 3, 7, 10, 11, 12, 13, 14, 15, 19, 20, 26, 27, 28, 29, 30, 31, 32, 36, 38, 40, 41, 42, 43, 44, 45, 46, 5, 68.

(பார்க்க : பி.ஜே.யின் தர்ஜமா, 8 வது பதிப்பு, பக்கம் 1083, 1084)

பின்பு பி.ஜே. கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறார்.

பொருள் செய்ய முடியாத எழுத்துக்களைக் குர்ஆனில் ஏன் குறிப்பிட வேண்டும்? என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்படலாம்.

அன்றைய அரபுப்பண்டிதர்களிடம் ஒரு வழக்கம் இருந்தது. உயர்தரமான இலக்கியங்களைப் படைக்கும் போது துவக்கத்தில் ஓரிரு எழுத்துக்களைப் பயன்படுத்தி வந்தனர்.

எனவே அனைத்து இலக்கியங்களையும் மிஞ்சி நிற்கின்ற திருக்குர்ஆன், தன்னைப்போல் எவராலும் உருவாக்க முடியாது என்று அறைகூவல் விடும் திருக்குர்ஆன் அதே வழிமுறையைக் கையாண்டு அறைகூவல் விடுத்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சிறு விஷயத்திற்குக் கூட விளக்கம் கேட்ட நபிகள் நாயகத்தின் தோழர்கள் இது குறித்து எந்தக் கேள்வியையும் எழுப்பியதில்லை. இது பற்றி கேள்வி எழுப்பியதாக ஒரு சான்றும் இல்லை.

அன்றைக்கு இது சர்வ சாதாரணமான ஒரு நடைமுறையாக இருந்ததை இதிலிருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரிகள் நபிகள் நாயகத்துக்கும், அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்துக்கும் களங்கம் ஏற்படுத்த எத்தனையோ கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர்.

திருக்குர்ஆனில் கையாளப்பட்ட இது போன்ற சொற்பிரயோகம் அன்றைக்கு சர்வ சாதாரணமாகவும், அவர்களால் ஏற்கப்பட்டதாகவும் இல்லாதிருந்தால் இதைக்கடுமையாக விமர்சனம் செய்திருப்பார்கள்.

முஹம்மதைப்பார்த்தீர்களா? அர்த்தமே இல்லாமல் உளறிவிட்டு இறைவேதம் என்கிறார்எனக்கூறியிருப்பார்கள்.

ஆனால் எதையெல்லாமோ விமர்சனம் செய்த எதிரிகள் இது குறித்து எந்த விமர்சனமும் செய்யவில்லை. ஒரே ஒருவர் விமர்சித்ததாகக்கூட எந்தச் சான்றும் இல்லை.

அவர்கள் விமர்சனம் செய்யாமல் இருந்ததிலிருந்தே இது போன்ற சொல் வழக்கு அவர்களிடம் இருந்துள்ளதை அறியலாம்.

எனவே தான் மேலே குறிப்பிட்ட அத்தியாயங்களின் துவக்கத்தில் இடம்பெறும் எழுத்துக்களைத் தமிழிலும் அப்படியே குறிப்பிட்டுள்ளோம்.

அன்றைக்கு இது அரபுகளிடம் சாதாரணமாக இருந்த ஒரு வழக்கம் என்ற அளவுக்கு இதைப் புரிந்து கொள்வதே போதுமானதாகும்.

(பார்க்க: பி.ஜே.யின் தர்ஜமா, 8 வது பதிப்பு, பக்கம் 1084)

மேற்படி விளக்கத்தில் பி.ஜே. திருக்குர்ஆனை தரம் கெட்ட கவிதைகளுக்கு ஒப்பிட்டு உளறித்தள்ளியுள்ளார்.

அவரின் உளறல்களை இப்பொழுது நாம் தெளிவாக விவரிக்க இருக்கிறோம்.

பி.ஜே.யின் உளறல் 1

குர்ஆனில் அல்லாஹ்வுக்கு மட்டுமே பொருள் தெரிந்த, எந்த மனிதருக்கும் பொருள் தெரியாத வசனங்களும் உள்ளன என்ற வாதம் முற்றிலும் தவறாகும். ஒரு மனிதருக்குக்கூட புரியாத வசனங்கள் குர்ஆனில் இருந்தால் மனிதர்களின் பார்வையில் அது உளறல் என்றே கருதப்படும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து எதிரிகள் இது போன்ற வசனங்களைக்காட்டி முஹம்மது உளறுகிறார் என்று நிலை நாட்டி இருப்பார்கள். அப்படி ஏதும் நடக்கவில்லை.

(பார்க்க : பி.ஜே.யின் தர்ஜமா, 8 வது பதிப்பு, பக்கம் 1166)

இவ்வாறு பி.ஜே. தனது மொழிபெயர்ப்பில் கூறியுள்ளார்.

நமது மறுப்பு

அர்த்தம் இல்லாத சொற்கள் உளறல் என்றும், இது போன்ற வசனங்கள் குர்ஆனில் இல்லை என்றும் வாதிட்ட பி.ஜே. திருக்குர்ஆனில் சில வசனங்களின் துவக்கத்தில் இடம்பெற்ற தனித்தனி எழுத்துக்களுக்கு பொருள் செய்யமுடியாத எழுத்துக்கள் என்றும், அவற்றிற்கு பொருள் கிடையாது என்றும் கூறி அர்த்தமற்ற வசனங்களும் குர்ஆனில் உள்ளன என்று கூறுகிறார். எனவே பி.ஜே.யின் வாதம்தான் அர்த்தமற்றதாக உளறலாக ஆகிவிட்டன.

பி.ஜே.யின் உளறல் 2

எந்த மனிதராலும் விளங்கமுடியாத வசனங்கள் (குர்ஆனில்) உள்ளனஎன்று வாதிடுவோரிடம் அந்த வசனங்கள் யாவை? என்று பட்டியலைக் கேட்டால் அவர்களிடம் இதற்கு எந்தப்பதிலும் இல்லை. ஒருவருக்கும் விளங்காத ஐந்தாறு வசனங்களைக்கூட அவர்களால் எடுத்துக்காட்ட முடியாது.

(பார்க்க : பி.ஜே.யின் தர்ஜமா, 8 வது பதிப்பு, பக்கம் 1166)

இவ்வாறு பி.ஜே. தனது மொழிபெயர்ப்பில் கூறியுள்ளார்.

நமது மறுப்பு

எந்த மனிதருக்கும் விளங்க முடியாத வசனங்களின் பட்டியலைக் கேட்ட பி.ஜே., அது போன்று ஐந்தாறு வசனங்களைக்கூட எடுத்துக்காட்ட முடியாது என்று கூறிய பி.ஜே. இப்பொழுது அவராகவே 29 அத்தியாயங்கள் திருக்குர்ஆனில் உள்ளன. அவற்றின் துவக்கத்தில் இடம்பெற்ற தனித்தனி எழுத்துக்களுக்கு பொருள் செய்ய முடியாது என்று பட்டியல் தருகிறார்.

பி.ஜே.யின் உளறல் 3

ஏரளமான தமிழ் மற்றும் பிறமொழி பெயர்ப்புகள் வந்துவிட்டன. அம்மொழிபெயர்ப்புகளில் எல்லா வசனங்களுக்கும் மொழிபெயர்ப்புச் செய்துள்ளனர். இது எங்களுக்கு புரியவில்லை. அல்லாஹ்வுக்கு மட்டும் தான் புரியும் எனக்கூறி ஒரு வசனத்தைக்கூட அவர்கள் மொழிபெயர்ப்புச் செய்யாமல் விடவில்லை.

(பார்க்க : பி.ஜே.யின் மொழிபெயர்ப்பு, 8 வது பதிப்பு, பக்கம் 1167)

இவ்வாறு பி.ஜே. கூறியுள்ளார்.

நமது மறுப்பு

;லகிலுள்ள எந்த மொழிபெயர்ப்பை எடுத்தாலும் 29 அத்தியாயங்களின் துவக்கத்தில் இடம் பெற்ற தனித்தனி எழுத்துக்களுக்கு மொழிபெயர்ப்புச் செய்யவில்லை. மேலும் அனைத்து குர்ஆன் விரிவுறை நூல்களிலும் அவற்றின் அர்த்தத்தை அல்லாஹ்வே நன்கறிந்தவன் என்று தான் கூறியுள்ளனர்.

வேடிக்கை என்னவெனில்; முதஷாபிஹாத் வசனங்களுக்குரிய சரியான விளக்கத்தை அல்லாஹ்வே நன்கறிந்துள்ளான் என்று அல்லாஹ் கூறிய பின்பும் அவற்றின் அர்த்தத்தை நானும் அறிந்துள்ளேன் என்று கூறி இணை கற்பித்த பி.ஜே. இப்பொழுது அவரும் 29 அத்தியாயங்களின் துவக்கத்தில் இடம் பெற்ற தனித்தனி எழுத்துக்களுக்கு  அர்த்தம் செய்ய முடியாமல் திக்குமுக்காடி திணறி, முகம் குப்புற விழுந்துவிட்டார். அல்லாஹ்வுக்கு முன்பு அனைத்து படைப்புகளும் மண்டியிட்டுத்தான் ஆகவேண்டும். பெருமையடிப்பவர்கள் கேவலப்பட்டுத்தான் ஆகவேண்டும்.

திமிர்த்தனமாக நானும் அல்லாஹ்வைப் போன்றுதான், எனக்கும் எல்லாம் தெரியும் என்று யார் கூறினாலும் அவர்களின் கதி படுகேவலம் தான் என்பதை பி.ஜே. போன்ற ஆட்களை வைத்து நாம் புரிந்து கொள்வோம்.

பி.ஜே.யின் உளறல் 4

திருக்குர்ஆனில் சில அத்தியாயங்களின் துவக்கத்தில் தனித்தனி எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன. தனித்தனி எழுத்துக்களுக்கு எந்த மொழியிலும் பொருள் செய்ய முடியாது என்பதை நாம் அறிவோம். உதாரணமாக sun (சன்) எனக் கூறினால் இதற்குப் பொருள் கூற முடியும். S.u.n. (எஸ். யூ. என்.) எனத்தனித்தனியாகக் கூறினால் மூன்று எழுத்துக்களைக் கூறினோம் என்பதைத் தவிர இதற்கு எந்த அர்த்தமும் இருக்காது.

இது போலவே அரபு மொழியில் அலம ( اَلَمَ ) என்று கூறினால் இதற்கு பொருள் கூற முடியும். அலிஃப், லாம், மீம்என அச்சொல்லின் எழுத்துக்களைத் தனித்தனியாகக் கூறினால் அரபு மொழியில் உள்ள மூன்று எழுத்துக்களைக் கூறினோம் என்பதைத்தவிர வேறு எந்த அர்த்தமும் இதற்கு இருக்காது.

இது போல் பொருள் செய்ய முடியாத வகையில் எழுத்துக்களைக்கொண்டு ஆரம்பமாகும் 29 அத்தியாயங்கள் திருக்குர்ஆனில் உள்ளன.

(பார்க்க : பி.ஜே.யின் தர்ஜமா, 8 வது பதிப்பு, பக்கம் 1083, 1084)

இவ்வாறு பி.ஜே. கூறியுள்ளார்.

நமது மறுப்பு 1

தனித்தனி எழுத்துக்களுக்கு எந்த மொழியிலும் அர்த்தம் கிடையாதாம்! இது பி.ஜே.யின் அறிவீனத்தைக் காட்டுகிறது. ஏனெனில் ஒருவர் அர்த்தமுள்ள சொல்லை சுருக்கி தனித்தனி எழுத்துக்களாக ஆக்கினால் அதற்கு அர்த்தம் உண்டு. மேலும் அவர் அத்தனித்தனி எழுத்துக்களுக்கு இந்த அர்த்தத்தைத் தான் நான் நாடியுள்ளேன் என்று உலகிற்கு பரைசாற்றினால் உலக மக்கள் அனைவருக்கும் அத்தனித்தனி எழுத்துக்களுக்கு அர்த்தம் புரிந்துவிடும்.

உதாரணமாக;

.தி.மு., தி.மு., .., .., தே.மு.தி., .., .., ... போன்ற எண்ணற்ற கட்சிகள் உள்ளன. மேற்கூறப்பட்ட தனித்தனி எழுத்துக்களுக்கு அர்த்தம் இல்லை என்றும், அது உளறல் என்றும் யாரும் கூறமாட்டார்கள். அவ்வாறு கூறுவது உளறல் என்று பி.ஜே. கூறுவாரேயானால் த... என்கிற அவரின் இயக்கம் பைத்தியக்கார இயக்கம் என்று அவரே ஏற்றுக் கொண்டதாக ஆகிவிடும்.

மறுப்பு 2

ஒருவர் அர்த்தமுள்ள சொல்லை சுருக்கி தனித்தனி எழுத்துக்களாக ஆக்கி, மேலும் அவ்வெழுத்துக்களுடைய அர்த்தத்தை உலகில் யாருக்கும் பரைசாற்றாவிட்டாலும் அச்சொல்லின் சொந்தக்காரரிடம் அத்தனித்தனி எழுத்துக்களுக்கு அர்த்தம் உண்டு. மேலும் அவர் அதற்குரிய உண்மையான அர்த்தமும், விளக்கமும் எனக்கு மட்டும் தான் தெரியும் என்று கூறினால் அத்தனித்தனி எழுத்துக்கள் உளறல் அல்ல. அதை மற்ற மக்கள் ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி. அவரை மறுக்கக்கூடிய எதிரிகள் தான் அத்தனித்தனி எழுத்துக்களை உளறல் என்றும், அதற்கு அர்த்தம் கிடையாது என்றும் கூறுவார்கள்.

அல்லது அம்மனிதரை மறுக்கக்கூடிய எதிரிகள் அம்மனிதரின் பிரமிப்பூட்டும் அழகிய இலக்கிய நயமுள்ள, ஆழமான பல கருத்துக்களைக் கொண்ட, மேலும் அனைத்து எதிரிகளும் திணறிவிடுமளவுக்கு மிக அழகான முறையில் பேசும் ஆற்றலைக்கண்டு நாம் இந்த தனித்தனி எழுத்துக்களை குறை கூறி கிண்டலடித்தால் அதற்கு தக்கபதில் கொடுக்கப்பட்டு மறுபடியும் நாம் கேவலப்பட்டுவிடுவோமோ என பயப்படும் எதிரிகள் அதை விமர்சிக்காமல் வாய்மூடி இருப்பார்கள்.

அதே சமயம் அத்தனித்தனி எழுத்துக்களின் சொந்தக்காரரின் உண்மையான நண்பர், மற்றும் உண்மையான நேசர்கள் அத்தனித்தனி எழுத்துக்களுக்கு நிச்சயம் ஏதேனும் அர்த்தம் இருக்கும். அது உளறல் கிடையாது என்று உறுதியாக நம்புவார்கள்.

இவ்வாறுதான் அல்லாஹ்வுடைய தனித்தனி எழுத்துக்கள் உள்ளன. எனவே இறைவனை மறுக்கக்கூடிய எதிரிகள்தான் அதற்கு அர்த்தம் கிடையாது, அது உளறல் என்று விமர்சிப்பார்கள்.

அல்லது அவற்றை குறை கூறி கிண்டலடித்தால் அதற்கு தக்கபதில் கொடுக்கப்பட்டு நாம் கேவலப்பட்டுவிடுவோமோ என்று அஞ்சுகிற இறைவனின் எதிரிகள் வாய்மூடி இருப்பார்கள்.

இறைவனை ஏற்றுக்கொண்ட உண்மையான முஃமின்கள் அதற்கு அர்த்தம் உண்டு என்றும், அது உளறல் கிடையாது என்றும், அதுவும் அல்லாஹ்வுடைய அர்த்தமுள்ள சொல்தான் என்றும் உறுதியாக நம்புவார்கள்.

இதைத்தான் அல்லாஹு தஆலா கீழ் கண்ட வசனத்தில் கூறுகிறான்.

هُوَ الَّذِي أَنْزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آَيَاتٌ مُحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آَمَنَّا بِهِ كُلٌّ مِنْ عِنْدِ رَبِّنَا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ (7) رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ (8)  [آل عمران 7-8] 

அவன் தான் இவ்வேதத்தை உம் மீது இறக்கினான். இதில் தீர்க்கமான வசனங்களும், இருக்கின்றன. அவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை முதஷாபிஹாத் (என்னும் சரியான பொருளை விளங்கமுடியாத வசனங்கள்) ஆகும். எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹாத் வசனங்களுக்கு (தவறான) விளக்கத்தை தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத்தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். (மார்க்க) கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம் என்று கூறுவார்கள். அறிவுடையோரைத்தவிர மற்றவர்கள் இதைக் கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.  (அல்குர்ஆன் 3/7)

இங்கு இன்னொரு முக்கியமான விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் அர்த்தமுள்ள சொல்லை சுருக்கி தனித்தனி எழுத்துக்களாக ஆக்கி, மேலும் அவ்வெழுத்துக்களுடைய அர்த்தத்தை உலகில் யாருக்கும் பரைசாற்றாவிட்டாலும் அச்சொல்லின் சொந்தக்காரரிடம் அத்தனித்தனி எழுத்துக்களுக்கு அர்த்தம் உண்டு. மேலும் அவரின் தனித்தனி எழுத்துக்களை எள்ளிநகையாடக்கூடிய, பரிகாசம் செய்யக்கூடிய கூட்டம் தோன்றும் போது அத்தனித்தனி எழுத்துக்களின் உண்மையான அர்த்தத்தையும், விளக்கத்தையும் அறியாத அவரின் உண்மையான நேசர்; அவ்வெழுத்துக்கள் பொதுமக்களுக்கு முன்னிலையில் கேவலப்படுத்தப்படுவதையும், கேலி செய்யப்படுவதையும் விரும்பாமல் அத்தனித்தனி எழுத்துக்களுக்கு தன்னால் முடிந்த விளக்கங்களை கொடுத்து பொதுமக்களின் உள்ளங்களில் அவ்வெழுத்துக்களின் சொந்தக்காரரின் கண்ணியத்தையும் மதிப்பையும் நிலைநாட்ட முயற்சிப்பார். ஆனால் அவர் கொடுக்கின்ற அனைத்து விளக்கமும் அழகாகவும், சுவையானதாகவும் இருந்தாலும் அத்தனித்தனி எழுத்துக்களின் உண்மை விளக்கத்தை அதை உருவாக்கியவர் மட்டும் தான் நன்கறிவார்.

இவ்வாறுதான் அல்லாஹ்வுடைய தனித்தனி எழுத்துக்களுக்கு உண்மையான விளக்கம் அவனுடைய நேசர்களுக்கே தெரியாவிட்டாலும் அவ்வெழுத்துக்கள் விமர்சிக்கப்படும் போது இறைநேசர்கள் இறைவனின் மகத்துவத்தையும், இறைவேதத்தின் மகத்துவத்தையும் நிலைநாட்ட தன்னால் முடிந்த விளக்கங்களை கூறுவார்கள். இவ்வாறு அவர்கள் விளக்கம் கூறுவது குழப்பத்தை விளைவிக்க நாடி அல்ல. மாறாக நன்மையை நாடி விளக்கம் கூறுவார்கள்.

இந்த நன்நோக்கத்திற்காகத்தான் இப்னு அப்பாஸ் (ரளி) போன்ற இறைநேசர்கள் இறைவனின் தனித்தனி எழுத்துக்களுக்கு தன்னால் இயன்ற விளக்கம் கொடுத்துள்ளார்கள்.

ஒவ்வொரு மொழியிலும் அம்மொழிக்காரர்கள் அர்த்தமுள்ள ஏதேனும்  ஒரு சொல்லிருந்து ஏதேனும் தனி எழுத்தை எடுத்து அவ்வெழுத்தைச் சொல்லி முழு சொல்லை நாடுவார்கள். இது எல்லா மொழிக்காரர்களிடத்திலும் சர்வ சாதாரணமான ஒரு நடைமுறையாகும்.

உதாரணமாக இறைவனின் தனித்தனி எழுத்துக்களுக்கு அர்த்தம் இல்லை (உளறல்) என்று வாதிடக்கூடிய பி.ஜே. தனது இயக்கத்திற்கு த... என்று தனித்தனி எழுத்துக்களைத்தான் கூறுகிறார். ஏனெனில் முதலாவதுஎன்பது தமிழ் நாடு என்ற சொல்லை குறிக்கும் என்றும், இரண்டாவதுதவ்ஹீத் என்ற சொல்லை குறிக்கும் என்றும்என்பது ஜமாஅத் என்ற சொல்லை குறிக்கும் என்றும் அவரே விளங்கி வைத்துள்ளார். 

இவ்வாறான ஒரு நடைமுறை அரபு மக்களிடத்திலும் இருந்துள்ளது. அதை இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்குகின்றார்கள்.

تفسير القرآن العظيم لابن كثير - (ج 1 / ص 159)

وما أنشدوه من الشواهد على صحة إطلاق الحرف الواحد على بقية الكلمة، فإن في السياق ما يدل على ما حذف بخلاف هذا، كما قال الشاعر

قلنا قفي لنا فقالت قاف ... لا تَحْسَبِي أنا نَسينا الإيجاف

تعني: وقفت. وقال الآخر

ஒரு கவிஞர் கூறுகிறார் : நமக்காக நீ நில் என்று நாம் சொன்னோம். அதற்கவள் நின்றேன் என்று கூறினாள்.

(‘நின்றேன்என்பதை அரபியில்வகஃப்து’ ( وَقَفْتُ என்று கூறவேண்டும். ஆனால் அதைக் கூறிய பெண்மணிகாஃப்’ ( قَافْ ) என்று மட்டும் கூறியுள்ளாள். காஃப்’ ( قَافْ ) என்பதுவகஃப்து’ ( وَقَفْتُ என்ற சொல்லின் இரண்டாவது எழுத்தாகும். மேலும் அது தனி எழுத்தாகும். எனினும்) அப்பெண்மணி காஃப்’ ( قَافْ ) என்ற தனி எழுத்தைச் சொல்லிவகஃப்து’ ( وَقَفْتُ என்ற அர்த்தத்தை நாடியுள்ளாள்.

நூல் : தஃப்ஸீருல் குர்ஆன் லி இப்னி கஸீர், பாகம் 1, பக்கம் 159)

تفسير القرآن العظيم لابن كثير - (ج 1 / ص 159)

ما للظليم عَالَ كَيْفَ لا يا ... ينقَدُّ عنه جلده إذا يا

قال ابن جرير: كأنه أراد أن يقول: إذا يفعل كذا وكذا، فاكتفى بالياء من يفعل، وقال الآخر

அநீதிழைப்பவனுக்கு நாசம் உண்டாகட்டும். எப்படி (அவனுக்கு) நாசம் ஏற்படாமல் இருக்கும். (இவ்விரோதி மறுபடியும்) விரோதப்போக்குடன் நடந்து கொண்டால் அவனுடைய தோல் அவனை விட்டும் உரிக்கப்பட்டுவிடும் என்று ஒரு கவிஞர் பாடினார்.

(மேற்படி கவிதையில் முதலாவது அடியின் இறுதியிலும், இரண்டாவது அடியின் இறுதியிலும்யா’ ( ياَ ) என்று முடிகிறது. இது தனி எழுத்தாகும். மேலும் முதலாவது அடியின் இறுதியில் உள்ள யா’ ( ياَ ) ‘யுன்கத்து’ ( يُنْقَدُّ ) என்ற வினைச்சொல்லின் முதல் எழுத்தாகும். இரண்டாவது அடியின் முடிவில் உள்ளயா’ ( ياَ ) ‘யஃதூ’ ( يَعْدُوْ ) என்ற வினைச்சொல்லின் முதல் எழுத்தாகும். அந்த முதல் எழுத்தைச்சொல்லி முழு வினைச்சொல்லை அக்கவிஞர் நாடியுள்ளார்.)

நூல் : தஃப்ஸீருல் குர்ஆன் லி இப்னி கஸீர், பாகம் 1, பக்கம் 159)

 

تفسير القرآن العظيم لابن كثير - (ج 1 / ص 159)

بالخير خيرات وإن شرًا فا ... ولا أريد الشر إلا أن تا

يقول: وإن شرًا فشر، ولا أريد الشر إلا أن تشاء، فاكتفى بالفاء والتاء من الكلمتين عن بقيتهما، ولكن هذا ظاهر من سياق الكلام، والله أعلم

நல்லதிற்குப் பகரமாக நல்லவைகள் ஏற்படும். நீ (எனக்கு) தீமையை நாடினால் (நானும் உனக்கு ) தீமையையே நாடுவேன். நீ (தீமையை) நாடினாலே தவிர நானும் தீமையை நாடமாட்டேன் என்று ஒரு கவிஞர் பாடினார்.

(மேற்படி கவிதையின் முதலாவது அடியின் இறுதியில்ஃபா’ ( فَا ) என்று முடிகிறது. இது தனி எழுத்தாகும். மேலும் அதுஃபஷர்ரன்’ ( فَشَرًّا ) என்ற சொல்லின் முதல் எழுத்தாகும். மேலும் இரண்டாவது அடியின் இறுதியில்தா’ ( تَا ) என்று முடிகிறது. இதுவும் தனி எழுத்தாகும். மேலும் அதுதஷாஅ      ( تَشَاءَ ) என்ற வினைச்சொல்லின் முதல் எழுத்தாகும். அத்தனி எழுத்துக்களைக் கொண்டு கவிஞர் அர்த்தமுள்ள முழு சொல்லை நாடியுள்ளார்.)

நூல் : தஃப்ஸீருல் குர்ஆன் லி இப்னி கஸீர், பாகம் 1, பக்கம் 159)

 

جامع البيان للطبري - (ج 1 / ص 214)

245 -  وكما حدثني يعقوب بن إبراهيم، قال: حدثنا ابن عُليَّة، عن أيوب، وابن عون، عن محمد، قال: لما مات يزيدُ بن معاوية قال لي عَبْدَة: إني لا أراها إلا كائنةً فتنةً، فافزع منْ ضَيْعَتِكَ والحقْ بأهلك. قلت: فما تأمرني؟ قال: أحَبُّ إليّ لك أنْ تا - قال أيوبُ وابن عون بَيده تحت خدِّه الأيمن، يصف الاضطجاع - حتى ترى أمرا تَعرفه (1)

قال أبو جعفر: يعني بـ "تا" تضطجع، فَاجتزأ بالتاء من تضطجع.     

முஹம்மது (இப்னு ஸீரீன்) ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள் : முஆவியா (ரளி) அவர்களின் மகன் யசீத் மரணமடைந்த பொழுதுநிச்சயமாக நான் இதை மிகப்பெரும் குழப்பம் ஏற்பட்டதாகவே கருதுகிறேன். எனவே நீங்கள் உமக்கு அழிவு ஏற்படுவதைப் பயப்படுங்கள். மேலும் உமது குடும்பத்துடன் நீங்கள் சேர்ந்துவிடுங்கள்என்று  உபைதா (ரஹ்) அவர்கள் என்னிடம் கூறினார்கள். (வேறு என்ன) எனக்கு நீங்கள் உத்தரவிடுகிறீர்கள்? என்று நான் கேட்டேன். அதற்கவர்; நீங்கள் ஒருக்கணித்து படுப்பது (விலா புறமாக் சாய்ந்து படுப்பது) எனக்கு மிகப்பிரியமானதாகும் என்று கூறினார்.

(நீ ஒருக்கணித்து படுப்பது என்பதை அரபியில்அன் தள்தஜிஅ’ ( اَنْ تَضْطَجِعَ ) என்று கூறப்படும். எனினும் உபைதா (ரஹ்) அவர்கள்தள்தஜிஅ’ (تَضْطَجِعَ ) என்ற வினைச்சொல்லின் ஆரம்ப எழுத்தானதா’ ( تَا ) என்ற தனி எழுத்தை மட்டும் கூறியுள்ளார். )

நூல் : ஜாமிவுல் பயான் லித் தபரீ, பாகம் 1, பக்கம் 214)

எனவே ஒவ்வொரு மொழியிலும் அம்மொழிக்காரர்கள் அர்த்தமுள்ள ஏதேனும்  ஒரு சொல்லிருந்து ஏதேனும் தனி எழுத்தை எடுத்து அவ்வெழுத்தைச் சொல்லி முழு சொல்லை நாடுவார்கள். இது எல்லா மொழிக்காரர்களிடத்திலும் சர்வ சாதாரணமான ஒரு நடைமுறையாகும். அதே மாதிரியான ஒரு நடைமுறையைத்தான் அல்லாஹு தஆலா அவனது குர்ஆனில் 29 அத்தியாயங்களின் துவக்கத்தில் தனித்தனி எழுத்துக்களின் மூலம் பயன்படுத்தியுள்ளான்.

எனினும் மேலே கூறப்பட்ட அனைத்து கவிகளிலும் அவற்றின் முன்பின் தொடரை வைத்து அவற்றில் இடம் பெற்ற தனி எழுத்துக்களுக்கு இது தான் அர்த்தம் என்பதை புரியமுடிந்ததை போல் குர்ஆனிலுள்ள தனித்தனி எழுத்துக்களுக்கு சரியான அர்த்தத்தை நம்மால் புரியமுடியவில்லை. ஏனெனில் அவற்றின் முன்பின் தொடரில் சரியான அர்த்தத்தை அறிவிக்கக்கூடிய வாக்கியம் இல்லை.

எனினும் குர்ஆனிலுள்ள தனித்தனி எழுத்துக்களுக்கு அர்த்தம் உண்டு. அவை உளறல் அல்ல என்பதை உணர்த்துவதற்காக இப்னு அப்பாஸ் (ரளி) போன்ற ஸஹாபாக்களும், நல்லோர்களும் தன்னால் இயன்ற விளக்கங்களை கூறியுள்ளார்கள்.

No comments:

Post a Comment