Wednesday 2 January 2013

அன்புள்ள ஆறாம்பண்ணை இப்றாஹீமுக்கு அன்பான வேண்டுகோள்


அன்புள்ள ஆறாம்பண்ணை இப்றாஹீமுக்கு அன்பான வேண்டுகோள்
இப்றாஹீம் அவர்களே! நீங்கள் எனக்கு அனுப்பிய மெயிலுக்கு 2 மாத காலமாகியும் நான் உங்களுக்கு பதிலளிக்கவில்லை என என் மீது ஆதங்கப்பட்டுள்ளீர்கள். அதற்குரிய உண்மையான விளக்கத்தைத் தருகிறேன்.
1 – எனது லேப்டாப் பழுதடைந்திருந்ததால் உடனடியாக பதில் எழுத முடியாமல் போனது.
2 – எனினும் நான் உங்களுக்கு பதிலளிப்பதற்காக கிட்டத்தட்ட நான்கு பக்க A 4 Size பேப்பர் அளவுக்கு எனது செல் போனில் தமிழில் மிகச் சிரமத்துடன் பதில் எழுதிய பொழுது இடையில் அது அழிந்து போனது.
3 – எனது பக்ரீத் விடுமுறையில் எனது வீட்டிலுள்ள கனினியில் உங்களுக்கு நான் பதில் எழுத ஆயத்தமான பொழுது உங்கள் ஆருயிர் அண்ணன் பி.ஜே. தூத்துக்குடி விவாதத்தைப் பற்றி பொய்யான தகவல்களை அவரது உணர்வு வார இதழில் புழுகியிருந்தார். எனவே அதற்கு மறுப்பு எழுதி மக்கள் அனைவருக்கும் உண்மையை உணர்த்தும் நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டதால் உங்கள் அண்ணனின் பொய் மூட்டைகளை அம்பலப்படுத்துவதற்காக மறுப்பு எழுத ஆரம்பித்தேன். ஆரம்ப கட்டமாக எனது மறுப்பின் சிலத் தொகுப்பை “அஹ்லுஸ் சுன்னாஹ் என்ற மாத இதழுக்கு அனுப்பி வைத்தேன். அந்த மறுப்புப் பணி இன்னும் எனக்கு முடிவடையவில்லை. தொடர்ந்து அப்பணியில் தான் இருக்கிறேன். அந்தப் பதில் உங்கள் ஒருவருக்காக மட்டும் இல்லாமல் மக்கள் அனைவருக்காகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே மேற்படி மாத இதழில் பிரசுரிக்க ஏற்பாடு செய்தேன். மேலும் www.musthafa maslahi.blogspot.com  என்ற எனது இணைய தளத்திலும் எனது மறுப்பை தொடராக பதிவு செய்ய ஆரம்பித்துள்ளேன்.
      இப்றாஹீம் அவர்களே! எனது இணைய தளத்தில் எனது மறுப்புக் கட்டுரையைப் படித்த நீங்கள் இரு முக்கியமான கேள்விகளைக் கேட்டுள்ளீர்கள்.
1 – குர்ஆனில் எழுத்துப் பிழை இருக்கிறது என்று கூறுவது குர்ஆனையும், அதை எழுதிய எழுத்தர்களான ஸஹாபாக்களையும் அவமதிப்பதோடு, அது யூத, நஸாராக்களின் நச்சுக்கருத்தாகும் என்ற தூ.டி. மாந்கர ஜ.உ. சபையின் நிலைப்பாட்டை தவறு என்று த.த.ஜ. தூத்துக்குடியில் நிரூபித்தது என்று கூறியுள்ளீர்கள்.
ஆனால் த.த.ஜ. வின் படுதோல்வியையும், அவர்களின் கொள்கை புதை குழிக்கு அனுப்பப்பட்டதையும் விவாதத்தைப் பார்த்த அனைத்து நடுநிலையான ( பி.ஜே. யிடம் அறிவை அடகு வைக்காத ) மக்களும், குறிப்பாக அரபு மொழியை முறையாக அறிந்த அனைத்து அறிஞர்களும் நன்கு விளங்கியுள்ளார்கள்.
2 – இரண்டு நூன்கள் ஒரு சேர வந்தால், அதில் இரண்டாவது நூனுக்கு சுக்கூன் இருந்தால் இரண்டாவது நூனை கண்டிப்பாக விட வேண்டும் என்பதற்கு தனியாக, நேரடியான ஆதாரம் தரவேண்டும் என்று என்னிடம் நீங்கள் கேட்டுள்ளீர்கள்.
      உங்களின் இக்கேள்விக்கு நான் நேரடியான ஆதாரத்தை உங்களுக்கு தந்துவிட்டால் “நுஞ்சி சரியாகத்தான் எழுதப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
      ஆம்! ஏற்றுக் கொள்வேன்! என்று நீங்கள் பதிலளித்தால் இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக உங்களுக்கு அதற்குரிய நேரடி ஆதாரத்தை நான் கூறுவேன்.
      இல்லை! நேரடி ஆதாரம் தந்தாலும் அதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்! என்று விதண்டாவாதமாக நீங்கள் பதிலளித்தால் உங்களின் கேள்விக்கு நான் பதிலளிப்பது வீண் வேலையாகும். எனவே உங்களுக்காக நான் பதில் எழுதி எனது பொன்னான நேரத்தை வீணடிக்கமாட்டேன்.
 (البقرة 2-18)   صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَرْجِعُونَ
(அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். (அவர்கள் நேரான வழியின் பக்கம்) திரும்பமாட்டார்கள். (அல்குர்ஆன். 2/18)
وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَعْقِلُونَ  (البقرة 2-171)
 அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால்; ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையும் கேட்டு, அறிய இயலாதவை (கால் நடை) போன்றவர்கள். (அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். அவர்கள் எதையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள். (அல்குர்ஆன். 2/171)
أَمِ اتَّخَذُوا مِنْ دُونِهِ آَلِهَةً قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ هَذَا ذِكْرُ مَنْ مَعِيَ وَذِكْرُ مَنْ قَبْلِي بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ الْحَقَّ فَهُمْ مُعْرِضُونَ  (الأنبياء 21-24)      
அல்லது அவர்கள் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்களை எடுத்துக் கொண்டார்களா? அப்படியாயின் உங்கள் (கொள்கைக்கு) அத்தாட்சியை நீங்கள் கொண்டு வாருங்கள், இதோ என்னுடன் இருப்பவர்களின் வேதமும் (குர்ஆனும்), எனக்கு முன்புள்ளவர்களின் வேதமும் இருக்கின்றன என்று (நபியே!) நீர் கூறும். எனினும் அவர்களில் அதிகமான பேர் சத்தியத்தை அறிந்து கொள்ளமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் (அதைப்) புறக்கணிக்கின்றார்கள். (அல்குர்ஆன். 21/24)
وَآَتَيْنَاهُمْ آَيَاتِنَا فَكَانُوا عَنْهَا مُعْرِضِينَ  (الحجر 15-81)    
நம்முடைய ஆதாரங்களை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். (எனினும்) அவற்றை அவர்கள் புறக்கணிக்கக்கூடியவர்களாகவே இருந்தனர். (அல்குர்ஆன். 15/81)
خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ  (الأعراف 7-199)
 (நபியே!) மன்னிப்பைக் கைக்கொள்வீராக! மேலும் நன்மையை ஏவுவீராக! மேலும் மடையர்களைப் புறக்கணித்துவிடும்! (அல்குர்ஆன். 7/199)
எனவே சத்தியத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கேள்வி கேட்பவர்களுக்கு பதிலளிப்பது வீண் வேலையாகும்.
       எனினும் சத்தியத்தை அறிய விரும்பும் நடு நிலை மக்களுக்காக எனது இணைய தளத்தில் எனது பதிலை இன்ஷா அல்லாஹ் எழுதிக்கொண்டு தான் இருப்பேன்.
       அல்லாஹ் நன்மைக்கு உதவி செய்வானாக! ஆமீன்!

11 comments:

  1. இறையருளால் நாளை பதில் தருகிறேன்

    ReplyDelete
  2. ///எனது பக்ரீத் விடுமுறையில் எனது வீட்டிலுள்ள கனினியில் உங்களுக்கு நான் பதில் எழுத ஆயத்தமான பொழுது உங்கள் ஆருயிர் அண்ணன் பி.ஜே. தூத்துக்குடி விவாதத்தைப் பற்றி பொய்யான தகவல்களை அவரது உணர்வு வார இதழில் புழுகியிருந்தார்.///

    பீஜே என்ன பொய்யான செய்திகளை சொன்னார் சொல்லுங்கள் .விளக்கம் தருகிறோம்
    அப்புறம் தியாக திருநாளை, மாட்டு பொங்கலாக ஆக்கிவிட்டீர்களே,அறிஞர் முஸ்தபா அவர்களே ,இது எப்படி ?

    ReplyDelete
  3. ஆறாம்பண்ணை இப்றாஹீம் அவர்களே! கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் தலைப்பு மாறி, தலை தெறிக்க ஓடுவது, மற்றும் முஸ்லிம்களின் சொற்கள், செயல்களை மாற்று மதத்தவர்களின் சொற்களோடும், செயல்களோடும் ஒப்பிட்டு பேசுவது ஆகிய இது போன்ற மோசமான காரியங்களை அரங்கேற்றுவதற்கு உங்கள் அண்ணனிடம் நீங்கள் நன்கு பயிற்சி பெற்றுள்ளீர்கள் போலும்!
    1 – ‘நுஞ்சி’ என்பது குர்ஆனில் சரியாகத்தான் எழுதப்பட்டிருக்கிறது என்பதற்கு ‘யுஹ்யீ’ மற்றும் ‘தாவூது’ போன்ற உதாரணங்களை கூறி தெளிவாக நான் பதிலளித்திருந்தும் ‘நுஞ்சி’ என்பதற்கு அதாவது இரண்டு நூன்கள் ஒரு சேர சந்தித்து, அதில் இரண்டாவது நூன் சுக்கூன் பெற்றிருந்தால், இரண்டாவது நூனை விட்டு எழுத வேண்டும் என்ற பழங்காலத்து விதிக்கு தனியாக நேரடி ஆதாரத்தை தரவேண்டும் என்று நீங்கள் என்னிடம் கூறியதால் நான் உங்களின் இந்த வேண்டுதலுக்கு ஒரு கேள்வியை கேட்டிருந்தேன். மறுபடியும் அதை உங்களுக்கு ஞாபகமூட்டுகிறேன்.
    ‘உங்களின் இக்கேள்விக்கு நான் நேரடியான ஆதாரத்தை உங்களுக்கு தந்துவிட்டால் ‘நுஞ்சி’ சரியாகத்தான் எழுதப்பட்டிருக்கிறது என்ற பேருண்மையை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
    ஆம்! ஏற்றுக்கொள்வேன்! என்று நீங்கள் பதிலளித்தால் இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக உங்களுக்கு அதற்குரிய நேரடி ஆதாரத்தை நான் கூறுவேன்.
    இல்லை! நேரடி ஆதாரம் தந்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று விதண்டாவாதமாக நீங்கள் பதிலளித்தால் உங்களின் கேள்விக்கு நான் பதிலளிப்பது வீண் வேலையாகும்’ என்று நான் கூறினேன். மேலும் அது வீண் வேலை என்பதற்கு சில வசனங்களையும் ஆதாரமாக குறிப்பிட்டேன். அப்படியிருந்தும் எனது கேள்விக்கு நீங்கள் ஒரு பதிலும் கூறாமல் ‘அண்ணனின் பொய் மூட்டைகளை கூறுங்கள்’ அப்பொய்களுக்கு பதில் தருகிறேன் எனக்கூறி நழுவியுள்ளீர்கள்.
    இப்றாஹீம் அவர்களே! கவலைப்பட வேண்டாம்! அவசரப்பட வேண்டாம்! இன்ஷா அல்லாஹ் உங்கள் அண்ணனின் பொய் மூட்டைகளை எனது இணைய தளத்தில் தொடர்ந்து அவிழ்த்துவிட்டுக் கொண்டே இருப்பேன். அதைப் பார்த்து உங்கள் அண்ணனின் பொய்களுக்கு விளக்கம் சொல்ல தயாராக இருங்கள். அதற்கு முன்பு நான் கேட்ட கேள்விக்கு பதிலளியுங்கள்.
    2 – இப்றாஹீம் அவர்களே! ‘பக்ரீத் விடுமுறை’ என்று நான் கூறியதற்கு ‘மாட்டுப்பொங்கல்’ என நீங்கள் தவறாக பொருள் கொடுத்துள்ளீர்கள்.
    பகர் என்றால் மாடு, ஈத் என்றால் பெருநாள் என்று பொருளாகும்.
    உங்களின் பாஷையில் ஈத் என்பதற்கு பொங்கல் என்றுதான் பொருளோ! அப்படியென்றால் ஈதுல் அழ்ஹாவுக்கு அழ்ஹா பொங்கல் என்றும், ஈதுல் ஃபித்ருக்கு ஃபித்ர் பொங்கல் என்றுதான் கூறுவீர்களோ!
    ஈதுல் அழ்ஹாவுக்கு யவ்முன் நஹ்ர் என்ற பெயரும் உண்டு. யவ்ம் என்றால் நாள், நஹ்ர் என்றால் அறுத்தல் என்று பொருளாகும். உங்கள் பாஷையில் யவ்முன் நஹ்ருக்கு நரபலி கொடுக்கும் நாள் என்றுதான் கூறுவீர்களோ!
    எனவே மாற்றார்களின் சொற்களையும், செயல்களையும் முஸ்லிம்களின் சொற்களோடும், செயல்களோடும் ஒப்பிட்டுப் பேசும் வழமையை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். இங்கு நான் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முயற்சியுங்கள். எனது நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
    خذ العفو وامر بالعرف وأعرض عن الجاهلين (الأعراف 7-199)
    அல்லாஹ் நன்மைக்கு உதவி செய்வானாக! ஆமீன்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. 2 மாதங்களுக்கு மேல் பொறுத்தேன் ,இன்னும் ஓரிரு நாட்கள் பொறுக்க கூடாதா?
    பக்ரீத்தான் பதில் என்று நினைத்துவிட்டீர்களோ ?அது உங்களது அறிவாற்றல் பற்றிய துணுக்கு மட்டுமே

    ReplyDelete
  6. உங்களது பின்னூட்டத்தில் எனது பதில் முழுவதுமாக வெளியட மறுக்கிறது .ஆதலால் பதிலை கீழ்கண்ட லிங்கில் பார்க்க
    http://tntjtutukudi.blogspot.in/

    ReplyDelete
  7. மவ்லவி முஹம்மது முஸ்தபாவுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் .உங்கள் பதிலை இணையதளத்தில் பார்த்தேன் .அதில் எனக்கு பதில் அளிக்ககாலதாமதம் ஆனதற்கு காரணம் சொல்லியிருந்தீர்கள் .நன்றிகள் .இருப்பினும் போனில் அட்டென் பண்ணி இதை சொல்லியிருக்கலாம் .அப்புறம் "பக்ரீத் லீவில் 'என்று குறிப்பிட்டுள்ளீர்கள் அதென்ன பக்ரீத் ? பக்ரீத் என்றால் மாட்டு பொங்கல் என்றுதான் பொருள் வரும் .தியாகத் திருநாள் [ஈதுல் அல்ஹா]என்று குறிப்பிட்டிருக்கலாமே .
    பீஜே உணர்வு வார இதழில் தூத்துக்குடி விவாதம் பற்றி பொய்யான தகவல்களை எழுதியுள்ளதால் அதற்கு தாங்கள் பதில் அளிக்க மூழ்கிவிட்டதால் எனக்கு பதில் அளிக்காமல் போயிற்று என்று கூறியுள்ளீர்கள் உங்களது இணைய தளத்தில் அந்த விவாதம் பற்றி எழுதுகையில் உணர்வில் பீஜே பொய்களை கூறியுள்ளதால் அதற்கான மறுப்பாக இதை வெளியிடுகிறேன் என்று குறிப்பிடவில்லையே ஏன்? பீஜே உணர்வில் என்ன பொய் கூறியிருந்தார் என்பதை எடுத்துக்காட்டி அது பொய் என்பதை நிருபித்து உண்மை என்னவென்பதை சொல்லியிருக்க் வேண்டும் அல்லவா?ஆனால அதில் அவ்வாறு சொல்லப்படவில்லை .
    உலகத்தில் யார் வேண்டுமானாலும் பொய் சொல்லிவிட முடியும் .ஆனால் பீஜே பொய் சொல்லிவிட முடியாது.பீஜே என்ன எங்களது கிளையில் கூட அதன் உறுப்பினர்களை சுன்னத் ஜமாஅத் கண்காணித்து வருகிறது .பீஜெ பற்றி அவர் சொல்லாதை எல்லாம் சொன்னதாகஅல்லது சொன்னதை திரித்து பேசப்பட்டு வருகையில் அவர் பொய் சொன்னால் விட்டு வைப்பார்களா?கண் கொத்தி பாம்பாக பல உலமாக்களும் அமைப்புகளும் கவனித்து வருகின்றன. அப்படி இருக்கையில் அவர் மறந்தும் கூட பொய் சொல்ல முடியாத நிலையை தமிழக முஸ்லிம்கள் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள் .அப்படியிருக்க வீடியோ பதிவு உங்களாலும் பதிவு செய்யப்பட்டிருக்கையில் அவர் பொய் சொல்லியிருக்கிறார் என்பதை நம்ப முடியாது .

    ReplyDelete
  8. உங்களது பதில்களை பார்ப்போம் .
    தூத்துக்குடி விவாதத்தில் எழுத்து பிழைகளை யூதர்கள் மட்டுமே இதுவரை சொல்லிவந்தார்கள் என்ற உங்களது வாதத்தை முறியடித்து விட்டார்கள் என்பதை
    விவாதம் முடியும் வரை ஒப்புக் கொள்ளாமல் சஹாபாக்கள் தவறு செய்துவிட்டதாக தவ்ஹித் ஜமாஅத்கூறிவருவதாக பொல்லாங்கு கூறிய நீங்கள் இங்கே ஒப்புக் கொண்டீர்கள் .உங்களது கண்ணியத்தை மதிக்கிறோம் .புகழ் இறைவனுக்கு மட்டுமே .
    ////ஆனால் த.த.ஜ. வின் படுதோல்வியையும், அவர்களின் கொள்கை புதை குழிக்கு அனுப்பப்பட்டதையும் விவாதத்தைப் பார்த்த அனைத்து நடுநிலையான ( பி.ஜே. யிடம் அறிவை அடகு வைக்காத ) மக்களும், குறிப்பாக அரபு மொழியை முறையாக அறிந்த அனைத்து அறிஞர்களும் நன்கு விளங்கியுள்ளார்கள்.////இது நீங்கள் எனக்கு எழுதியுள்ளபதிலில் உள்ள வாசகம் .அந்த அனைத்து நடுநிலையான மக்களில் ஒருவரை சொல்லுங்கள் .

    ////உங்களின் இக்கேள்விக்கு நான் நேரடியான ஆதாரத்தை உங்களுக்கு தந்துவிட்டால் “நுஞ்சி” சரியாகத்தான் எழுதப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?
    ஆம்! ஏற்றுக் கொள்வேன்! என்று நீங்கள் பதிலளித்தால் இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக உங்களுக்கு அதற்குரிய நேரடி ஆதாரத்தை நான் கூறுவேன்.////
    நீங்கள் எழுதியவற்றில் உங்களிடம் விளக்கம் கேட்டால் விளக்கம் தருவதே அறிஞர்களின் கடமை .நான் சொன்னால் சொன்னதுதான் அதற்கு பதில் சொல்லிவிட்டால் நீ அதை ஏற்றே தீர வேண்டும் அப்போதுதான் சொல்லுவேன் என்பது எனது அறிவை உங்களிடம் அடகு வைக்க தூண்டுகிறீர்கள் என்று பொருள் .நீங்கள் நான் ஏற்கனவே பீஜெவிடம் எனது அறிவை அடகு வைத்துவிட்டதாக சொல்லியுள்ளீர்கள் .நான் அதை மீட்டால்தானே உங்களிடம் திருப்பி அடகு வைக்க முடியும் .ஆகவே நான் எனது அறிவை மீட்பதற்கு உங்களது ஆதாரத்தை அறிவுக்கு ஒவ்வாத நிபந்தனைகள் இல்லாமல் வையுங்கள் .அதுதான் உங்களை அறிஞர் வரிசையில் சேர்க்கும் .இல்லையெனில் வெறும் மிரட்டல் பேர்வழியாக சமுதாயம் எடுத்துக் கொள்ளும் .


    ////இல்லை! நேரடி ஆதாரம் தந்தாலும் அதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்! என்று விதண்டாவாதமாக நீங்கள் பதிலளித்தால் உங்களின் கேள்விக்கு நான் பதிலளிப்பது வீண் வேலையாகும். எனவே உங்களுக்காக நான் பதில் எழுதி எனது பொன்னான நேரத்தை வீணடிக்கமாட்டேன்.////
    உங்களிடம் நேரடியான ஆதாரங்கள் இருந்தால் அது தான் இந்த விவாதற்கு அடிப்படையான விஷயம் .அந்த நேரடியான் ஆதாரத்தை தராமல் நீங்கள் எடுத்து வைக்கும் வாதங்கள் அர்த்தமற்றவைகள் .விவாதத்தில்ஆதாரத்தை வைக்காமல் பொத்தி வைக்க வேண்டிய அவசியம் என்ன? பீஜே அவர்கள் வெறும் நூலின் பெயரை மட்டும் சொல்லுவதில்லை .எந்த நூல் என்பதையும் பக்கம் என்பதையும் மூல வாசகங்களையும் எடுத்து வைப்பதே அவரது விவாத பாங்கு .நீங்கள் அந்த நேரடியான் ஆதாரத்தை வையுங்கள் அதை சரி பார்த்து ஏற்றுக் கொள்வோம் .நீங்கள் யூதர்கள் மட்டுமே குர்ஆனில் பிழைகள் இருப்பதாக சொன்னது சுத்த பொய் என்று ஏற்கவில்லையா அது போல ஏற்றுக் கொள்வோம் ,ஆனால் ஆதாரத்தை வைக்காமல் கண்மூடித்தனமாக நான் சொன்னால் அது சரி என்று கொள்ளவேண்டும் என்றால் அதென்ன அறிவுடமையா?
    continue

    ReplyDelete
  9. நேரடி ஆதாரம் தந்தாலும் நான் ஏற்க மாட்டேன் என்று நான் கூறவில்லையே ,அந்த ஆதாரம் சரியானதா என்று பார்க்க வேண்டாமா?
    ஏனெனில்,அல் இத்கான் என்ற நூலில் உள்ள வாசகத்தை மக்கள் முன் வைத்துதான் நீங்கள் வாதித்திருக்க வேண்டும் .குர்ஆன் வந்து 700 ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட அந்த நூலில் இப்படித்தான் எழுத வேண்டும் என்று விதி இருக்க வேண்டும் .அவ்வாறு விதிகளை சொல்லுவதற்கு
    குர்ஆனுக்கு முந்தையகாலத்து நூல்களிலிருந்து ஆதாரம் காட்டியிருக்க வேண்டும் .
    குர்ஆன் வந்த பிறகு குர் ஆனில் ஏன் அங்ஙனம் எழுதப்பட்டுள்ளது என்பதை அனுமானமாக சொன்னால் அது விதியாக இருக்காது .ஆகவே அல் இத்கான் நூலில் உள்ள விதிகள் நான் சொன்னவாறு இருந்தால் நுஞ்சி என்பது சரியாகத்தான் எழுதியிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறேன் .
    அடுத்து
    ///யுஹ்யீ (يُحْيِي) என்பதில் ஒரே இனத்தைச்சார்ந்த இரண்டு “யே ((ي அடுத்தடுத்து வந்து அதில் இரண்டாவது “யே ((ي சுக்கூன் பெற்றிருப்பதால் அதை ஸஹாபாக்கள் விட்டு எழுதியுள்ளனர்.

    குர்ஆனிலுள்ள அனைத்து யுஹ்யீ (يُحْيِي) களும் இவ்வாறுதான் எழுதப்பட்டிருக்கும். எனினும் சட்ட அடிப்படையில் விடப்பட்ட அந்த எழுத்தை உச்சரிக்க வேண்டும் என்பதற்காகவும், ஆரம்பகால எழுத்து விதியை நாம் அறியாததாலும் விடப்பட்ட “யே ((يவை அறிவிப்பதற்காக எழுதப்பட்டிருக்கும் “யே ((يக்கு அருகில் அரபுநாட்டு குர்ஆன் பிரதியில் ( ) ஒரு சிறிய “யே ((يயும் இந்திய நாட்டு குர்ஆன் பிரதியில் யே ((يக்கு கீழ் கடாஜேரும் ( ) போடப்பட்டிருக்கும்.////

    அடுத்து,நனசக் ,நுன்சிஹா என்ற சொற்கள் ஏன் இதே அடிப்படையில் எழுதப்படவில்லை ?

    மேலும் உங்களிடம் கேட்க விழைவது ,நீங்கள் குர்ஆனில் பீஜே எழுத்து பிழைகள் உள்ளதை அல்லாஹ்வுக்காக அதை தவறு என்று எடுத்துக்காட்டி சரிபடுத்த வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் இருந்தால் ,பீஜே அவர்கள் அவரது மொழியாக்கத்தில் குர்ஆனில் உள்ள 19எழுத்து பிழைகளை பட்டியலிட்டுள்ளார். அவைகள் அனைத்தும் எழுத்து பிழைகள் இல்லை என்பதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி அவருக்கு நேரிலோ தபாலிலோ அனுப்பி விளக்கம் கேட்டிருக்க வேண்டும் .அதன்பிறகும் அவர் உங்களுக்கு விளக்கம் அளிக்கவில்லைஎன்றால் உங்களது அஹ்லு சுன்னா மாத இதழில் அல்லது இணைய தளத்தில் அதைப்பற்றி எழுதியிருக்க வேண்டும் .அதற்கு அவர் பதில்அளித்திருப்பார் . அதன் பிறகு விவாதத்திற்கு அழைத்திருக்கவேண்டும்.ஆனால் ஒரு நாலைந்து சொற்களில் மட்டும் பிழைகள் இல்லை என்பதை உங்கள் அறிவுக்கு ஏற்றவாறு ஆய்வு செய்துவிட்டு ,அதை வைத்து பீஜெவுடன் விவாதம் நடத்தி தமிழகத்தில் பிரபலம் ஆகவேண்டும் என்பது உங்களது அற்புத கனவு .நாங்கள் பீஜேவை ஆருயிராக மட்டுமே கருதுகிறோம் .ஆனால் நீங்களோ பீஜெவுடன் விவாதித்தால்தான் தமிழகத்தில் பிரபல ஆகமுடியும் என்று பீஜேமீது வரம்புமீறி நம்பிக்கை வைத்துஉள்ளீர்கள் .அந்த நம்பிக்கையை அல்லாஹ் தகர்த்துவிட்டான் .அவனுக்கே புகழனைத்தும்

    ReplyDelete
  10. நான் அறியாமை காலத்தில் பக்ரீத் என்று கூறி வந்தேன் இப்போது எழுத்தளவில் ஈதுல் அல்ஹா என்றும் பேச்சளவில் ஹஜ்ஜு பெருநாள் என்றும் கூறிவருகிறேன் .நீங்கள் இன்னும் அறியாமை காலத்தில் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளேன்
    உங்களது வியாக்கியானப்படி பார்த்தால் ,மாட்டு பொங்கல் அன்று மாட்டை குளிப்பாட்டி அதன் கொம்புகளுக்கு பெயிண்ட் அடித்து ,திலகமிட்டு ,அதற்கு மாலை சூடி ,பொங்கலிட்டு வணங்குவார்கள் .அதனால் அதை மாட்டுக்கு திருநாள் என்றும் சொல்வதுண்டு .
    ஆனால் மாட்டை அறுத்து பிரியாணி பொங்கி சாப்பிடுவதால் மாட்டு பொங்கல் என்பது ஈதுல் அல்ஹாவுக்குத்தான் பொருந்தும் என்று கூற வருகிறீர்களா?

    ReplyDelete
  11. முஸ்தபா மவ்லவி ///சத்தியத்தை அறிய விரும்பும் நடு நிலை மக்களுக்காக எனது இணைய தளத்தில் எனது பதிலை இன்ஷா அல்லாஹ் எழுதிக்கொண்டு தான் இருப்பேன்.///
    அதென்ன நடுநிலை நாளேடு மாதிரி நடுநிலை மக்கள் என்று இஸ்லாம் அனுமதிக்கிறதா ?

    நம்முடைய ஆதாரங்களை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். (எனினும்) அவற்றை அவர்கள் புறக்கணிக்கக்கூடியவர்களாகவே இருந்தனர். (அல்குர்ஆன். 15/81)
    நீங்கள் இந்த வசனத்தை கூறியது போல ஆளுக்கு ஆள் ஏதோ ஒரு ஆதாரத்தை தந்துவிட்டு இதே வசனத்தை காட்டமுடியும் .யாரை வேண்டுமானாலும் குற்றம் படுத்தி விட்டு அதற்கு தொடர்பான வசனங்களையும் ஹதித்களையும் வரிசைபடுத்த என்னாலும் முடியும் .ஆனால் அந்த குற்றங்களை நிருபிக்க முடியுமா?
    ஆதாரம் கேட்டாலே நான் தரும் ஆதாரத்தை கணணி மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்வாயா ?அப்போதுதான் தருவேன் என்றால் அந்த ஆதாரம் யாருக்கு வேண்டும்?கேட்டவுடன் ஆதாரத்தை அள்ளி போடுவதல்லவா ஆலிம்களுக்கு அழகு ?

    ReplyDelete