Sunday 6 January 2013


பி.ஜே. யின் அறியாமை - 5

குர்ஆனில் 47:31 –ல் வநப்லுவ  (ونبلوا )   என்பதில்வாவ் ( و)வுக்கு அடுத்து ஒரு அலிஃபை கூடுதலாக தவறாக எழுதிவிட்டனர் என்று பி.ஜே. குழு கூறியது.

 

தூ.டி... சபை சார்பில் அளிக்கப்பட்ட பதில்

அரபி மொழியில் ஆரம்பகாலத்து முறைப்பிரகாரம் அது சரியாகத்தான் எழுதப்பட்டிருக்கின்றது. அவ்விதிவென்னவெனில் ஒரு வினைச்சொல் அல்லது பெயர்ச்சொல்லை வாவ் ( و)வில் முடிக்கும்போது அதற்கடுத்து ஒருஅலிஃபை கூடுதலாக எழுதுவது ஆரம்பகாலத்து எழுத்து விதியில் இருக்கிறது. எனினும் அந்த அலிஃபை உச்சரிக்கமாட்டார்கள். இந்த எழுத்துமுறை இன்றைய காலத்திலும் கூட பரவலாக பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாககாலூ (قَالُوا), லம் யஃப்அலூ (لَمْ يَفْعَلُوا), லன் யஃப்அலூ (لنْ يَفْعَلُوا) இது போன்ற வினைச்சொற்களின் கடைசியிலுள்ள வாவ் (و)வுக்கு அடுத்துள்ள அலிஃப் கூடுதலான எழுத்தாகும். எனினும் அதை உச்சரிக்கக்கூடாது. மேலும் அந்த அலிஃபை தவறு என்று கூறுபவர்கள் முட்டாள்களாகும். எனவே தான் ...வினர் கூட இது விஷயமாக வாய் திறக்க மிகவும் பயந்தனர். எனெனில் அதுதான் எழுத்துமுறை என்பதை அரபி மதரஸாவின் 1-ஆம் வகுப்பு மாணவன் கூட நன்கு விளங்கி வைத்துள்ளான்.

      பிற்காலத்து இலக்க மேதைகள் ஆரம்பகாலத்து எழுத்துமுறைகளில் இன்றைய மக்கள் எந்த இடங்களில் குழப்பம் அடைவார்கள் என்று அஞ்சினார்களோ அங்கு மட்டும் ஆரம்பகாலத்து எழுத்துமுறையை விட்டுவிட்டு புதிய எழுத்துமுறையை உருவாக்கிக்கொண்டார்கள்.

      எனவே ஒரு வினைச்சொல் அல்லது பெயர்ச்சொல் வாவ் (و)-ல் முடியும் பொழுது அந்த வாவ் (و)-க்கு அடுத்து ஒரு அலிஃபை கூடுதலாக எழுதுவது ஆரம்பகாலத்து எழுத்துமுறையாகும் என்று நாம் கூறினோம். மேலும் அதற்கு குர்ஆனிலிருந்து எண்ணற்ற சொற்களை ஆதாரங்களுடன் பட்டியலிட்டோம். அதைக்கேட்ட ...வினர் மூக்கறுபட்டு நமது வாதங்களுக்கு பதில் இல்லாததால் அவையனைத்தும் பிழைதான் என்று கூறி வழமைபோல் அசடு வழிந்தனர்.

 

(குறிப்பு : மேலே நாம் கூறிய சட்டம் அல்புர்ஹான் ஃபீ உலூமில் குர்ஆன் என்ற நூலில் பா-1, பக்-382 லும், உன்வானுத்தலீல் மின் மர்சூமி கத்தித்தன்சீல் என்ற நூலில் பா-1, பக்-6 லும் மிக விரிவாக கூறப்பட்டுள்ளது. எனினும் பொது மக்கள் அனைவரும் மிக எளிதில் விளங்கும் விதத்தில் அச்சட்டத்தை மிக சுருக்கி கூறியுள்ளோம்.)

 

இதோ நாம் கொடுத்த பட்டியல்:

வினைச்சொல்லில் உதாரணங்கள்

1.   லியர்புவ ( ليربوا) இது குர்ஆனில் 30:39, 30:39 ஆகிய வசனத்தில் வருகிறது.

2.   நப்லுவ ( نبلوا) இது குர்ஆனில் 47:31என்ற வசனத்தில் வருகிறது

3.   தப்லூ ( تبلوا) இது குர்ஆனில் 10:30 என்ற வசனத்தில் வருகிறது

4.   லியப்லுவ ( ليبلوا) இது குர்ஆனில் 47:4 என்ற வசனத்தில் வருகிறது

5.   லிதத்லுவ ( لتتلوا) இது குர்ஆனில், 13:30 என்ற வசனத்தில் வருகிறது.

6.   தத்லூ ( تتلوا) இது குர்ஆனில் 2:102, 10:61, 28:45, 29:48 ஆகிய வசனங்களில் வருகிறது.

7.   ஸஅத்லூ ( سأتلوا) இது குர்ஆனில் 18:83 என்ற வசனத்தில் வருகிறது

8.   அத்லுவ ( أتلوا) இது குர்ஆனில் 27:92 என்ற வசனத்தில் வருகிறது

9.   நத்லூ ( نتلوا) இது குர்ஆனில் 28:3 என்ற வசனத்தில் வருகிறது.

10.  யத்லூ ( يتلوا) இது குர்ஆனில் 2:129, 2:151, 3:164, 28:59, 62:2, 65:11, 98:2 ஆகிய வசனங்களில் வருகிறது.

11.  லன்நத்வுவ ( لن ندعوا ) இது குர்ஆனில் 18:14 என்ற வசனத்தில் வருகிறது.

12.  அநத்வூ ( أندعوا) இது குர்ஆனில் 6:71, 16:86, 17:71, 40:74 ஆகிய வசனங்களில் வருகிறது.

13.  அத்வூ ( أدعوا) இது குர்ஆனில் 12:108, 13:36, 19:48, 72:20 ஆகிய வசனங்களில் வருகிறது.

14.  யத்வூ ( يدعوا) இது குர்ஆனில் 2:221, 10:25, 22:12, 22:13, 35:6, 39:8, 46:5, 84:11 ஆகிய வசனங்களில் வருகிறது.

15.  தத்வூ ( تدعوا) இது குர்ஆனில் 70:17 என்ற வசனத்தில் வருகிறது.

16.  யர்ஜூ ( يرجوا) இது குர்ஆனில் 18:110, 29:5, 33:21, 39:9, 60:6 ஆகிய வசனங்களில் வருகிறது.

17.  தர்ஜூ ( ترجوا) இது குர்ஆனில் 28:86 என்ற வசனத்தில் வருகிறது.

18.  யஃ ஃபூ ( يعفوا) இது குர்ஆனில் 5:15, 42:25, 42:30 ஆகிய வசனங்களில் வருகிறது.

19.  யஃ ஃபுவ ( يعفوا) இது குர்ஆனில் 2:237 என்ற வசனத்தில் வருகிறது.

20.  அஷ்கூ ( أشكوا) இது குர்ஆனில் 12:86 என்ற வசனத்தில் வருகிறது.

21.  யம்ஹூ ( يمحوا) இது குர்ஆனில் 13:39 என்ற வசனத்தில் வருகிறது.

மேற்கூறப்பட்ட வசனங்களில் இடம்பெற்ற அனைத்து வினைச்சொற்களின் கடைசியில்

வாவ் வந்திருப்பதால் அந்த வாவ்-வுக்கு அடுத்து ஒரு அலிஃபை கூடுதலாக எழுதப்பட்டிருக்கிறது.

 

பெயர்ச்சொல்லில் உதாரணம்

அர்ரிபா (الربوا)  இது குர்ஆனில் 2:275, 2:275, 2:275, 2:276, 2:278, 3:130, 4:161 ஆகிய 7 இடங்களில் வருகிறது.

            மேற்கூறப்பட்ட வசனங்களில் இடம்பெற்ற பெயர்ச்சொல்லின் கடைசியில் வாவ் வந்திருப்பதால் அந்த வாவ்-வுக்கு அடுத்து ஒரு அலிஃபை கூடுதலாக எழுதப்பட்டிருக்கிறது.

 

முக்கிய கவனிப்பு:

30:39 என்ற வசனத்தில் ரிபா (ربا) என்பதில் கடைசியில் வாவ் வராததால் அதில் ஒரு அலிஃபை கூடுதலாக எழுதப்படவில்லை.

 

 

பி.ஜே. யின் அறியாமை – 6

குர்ஆனில் லுஅஃபாவு ( ضعفؤا) , ஷுரக்காவு ( شركؤا) , நஷாவு ( نشؤا) ஆகியவற்றில் கடைசியிலுள்ள அலிஃப் தவறாக எழுதப்பட்டுள்ளது என்று பி.ஜே. குழு கூறியது.

தூ.டி... சபை சார்பில் அளிக்கப்பட்ட பதில்

அவை ஆரம்பகாலத்து எழுத்துவிதிப்படி சரியாகத்தான் எழுதப்பட்டுள்ளது. அது என்னவெனில் ஒரு வார்த்தையின் கடைசி ஓரத்தில்பேஷ் செய்யப்பட்டு இடம்பெற்றஹம்ஜா (ءُ)-வை வாவ் (و) ஆக எழுதப்பட்டால் அந்த வாவுக்கு அடுத்து ஒரு அலிஃபை கூடுதலாக எழுதப்பட வேண்டுமென்பது ஆரம்பகாலத்து எழுத்து விதியாகும். ( ஆதாரம்நூல்: அல்முக்னிஃ (المقنع) , பாகம்-1. பக்.13) என்று கூறி அச்சட்டத்திற்கு வினைச்சொல்லிலும் பெயர்ச்சொல்லிலும் குர்ஆனிலிருந்தே எண்ணற்ற சொற்களை ஆதாரங்களுடன் பட்டியலிட்டோம். மறுபடியும் நமது வாதங்களுக்கு பதில் இல்லாததால் அவையனைத்தும் பிழைதான் என்று கூறி மழுப்பினர்.

 

(குறிப்பு : மேலே நாம் கூறிய சட்டம் அல்முக்னிஃ (المقنع) என்ற நூலில் பா-1, பக்-13 ல் மிக விரிவாக கூறப்பட்டுள்ளது. எனினும் பொது மக்கள் அனைவரும் மிக எளிதில் விளங்கும் விதத்தில் அச்சட்டத்தை மிக சுருக்கி கூறியுள்ளோம்.)

 

இதோ நாம் கொடுத்த பட்டியல்

வினைச்சொல்லில் உதாரணங்கள்

1.   யப்தஉ ( يبدؤا) இது குர்ஆனில். 10:4, 10.34, 10:34, 27:64, 30:11, 30:27 ஆகிய  6 இடங்களில் வருகிறது.

2.    லாதல்மஉ ( لا تظمؤا) இது குர்ஆனில் 20:119ல் வருகிறது.

3.   யஃ பஉ ( يعبؤا) இது குர்ஆனில் 25:77ல் வருகிறது.

4.   தஃப்தஉ ( تفتؤا) இது குர்ஆனில் 12:85ல் வருகிறது.

5.   நஷாவு ( نشؤا) இது குர்ஆனில் 11:87ல் வருகிறது.

மேற்கூறப்பட்ட அனைத்து இடங்களிலும் கடைசியில் இடம்பெற்ற ஹம்ஜாவை வாவாக எழுதப்பட்டதால் அதற்கடுத்து ஒரு அலிஃபை கூடுதலாக எழுதப்பட்டு இருக்கிறது.

 

முக்கிய கவனிப்பு:

6:83, 6:138, 7:100, 8:31, 12:56, 12:76, 12:110, 17:18, 21:9, 22:5, 36:66, 36:67, 39:74, 42:52, 43:60, 47:30, 56:65, 56:70 ஆகிய வசனங்களில் நஷாவு ( نشاء) என்பதில் கடைசி ஓரத்தில் இடம்பெற்ற ஹம்ஜாவை வாவ்-ஆக எழுதப்படாமல் ஹம்ஜாவாகவே எழுதப்பட்டிருப்பதால், அந்த ஹம்ஜாவிற்கு பின்பு ஒரு அலிஃபை கூடுதலாக எழுதப்படவில்லை.

பெயர்ச்சொல்லில் உதாரணங்கள்

1.   புரஆஉ ( برءؤا ) இது குர்ஆனில் 60:4ல் வருகிறது

2.   லுஅஃபாஉ ( ضعفؤا) இது குர்ஆனில் 14:21, 40:47 ஆகிய இரு இடங்களில் வருகிறது

மேற்கூறப்பட்ட சொற்களின் கடைசி ஓரத்தில் இடம்பெற்ற ஹம்ஜாவை வாவ்-ஆக எழுதப்பட்டிருப்பதால் அந்த வாவ்-க்கு அடுத்து ஒரு அலிஃபை கூடுதலாக எழுதப்பட்டுள்ளது.

முக்கிய கவனிப்பு:

2:266, 9.91 ஆகிய வசனங்களில் லுஅஃபாஉ ( ضعفاء) என்பதில் கடைசி ஓரத்தில் இடம்பெற்ற ஹம்ஜாவை வாவ்-ஆக எழுதப்படாமல் ஹம்ஜாவாகவே எழுதப்பட்டிருப்பதால், அந்த ஹம்ஜாவிற்கு பின்பு ஒரு அலிஃபை கூடுதலாக எழுதப்படவில்லை.

3.   ஷுரகாஉ ( شركؤا)(6:94, 42:21) ஆகிய இரு இடங்களில் வருகிறது

மேற்கூறப்பட்ட சொற்களின் கடைசி ஓரத்தில் இடம்பெற்ற ஹம்ஜாவை வாவ்-ஆக எழுதப்பட்டிருப்பதால் அந்த வாவ்-க்கு அடுத்து ஒரு அலிஃபை கூடுதலாக எழுதப்பட்டுள்ளது.

 

முக்கிய கவனிப்பு:

4:12, 6:100, 6:139, 7:190, 10:66, 13:16, 13:33, 30:28, 34:27, 39:29, 68:41 ஆகிய வசனங்களில் ஷுரகாஉ ( شركاء) என்பதில் கடைசி ஓரத்தில் இடம்பெற்ற ஹம்ஜாவை வாவ்-ஆக எழுதப்படாமல் ஹம்ஜாவாகவே எழுதப்பட்டிருப்பதால், அந்த ஹம்ஜாவிற்கு பின்பு ஒரு அலிஃபை கூடுதலாக எழுதப்படவில்லை.

 

4.   ஜஸாவு ( جزاؤا) இது குர்ஆனில் 5:29, 5:33, 20:76, 39:34, 42:40, 59:17 ஆகிய வசனங்களில் வருகிறது. இவற்றின் கடைசியில் இடம்பெற்ற ஹம்ஜாவை வாவாக எழுதப்பட்டதால் அதற்கடுத்து ஒரு அலிஃபை கூடுதலாக எழுதப்பட்டு இருக்கிறது.

முக்கிய கவனிப்பு:

2:85, 2:191, 5:38, 5:85, 5:95, 9:26, 9:82, 9:95, 10:27, 12:25, 17:63, 18:88, 25:15, 32:17, 34:37, 41:28, 41:28, 46:14, 53:41, 54:14, 55:60, 56:24, 76:9, 76:22, 78:26, 78:36 ஆகிய வசனங்களில் உள்ள ஜஸாவு ( ) என்பதில் கடைசி ஓரத்தில் இடம்பெற்ற ஹம்ஜாவை வாவ்-ஆக எழுதப்படாமல் ஹம்ஜாவாகவே எழுதப்பட்டிருப்பதால், அந்த ஹம்ஜாவிற்கு பின்பு ஒரு அலிஃபை கூடுதலாக எழுதப்படவில்லை.

5.   உலமாஉ ( )  இது குர்ஆனில் 26:197, 35:28 ஆகிய வசனங்களில் வருகிறது. இவற்றின் கடைசியில் இடம்பெற்ற ஹம்ஜாவை வாவாக எழுதப்பட்டதால் அதற்கடுத்து ஒரு அலிஃபை கூடுதலாக எழுதப்பட்டு இருக்கிறது

6.   ஷுஃபஆஉ ( )  இது குர்ஆனில் 30:13ல் வருகிறது. இவற்றின் கடைசியில் இடம்பெற்ற ஹம்ஜாவை வாவாக எழுதப்பட்டதால் அதற்கடுத்து ஒரு அலிஃபை கூடுதலாக எழுதப்பட்டு இருக்கிறது.

முக்கிய கவனிப்பு:

7:53, 39:43 ஆகிய வசனங்களில் ஷுஃபஆஃ ( ) என்பதில் கடைசி ஓரத்தில் இடம்பெற்ற ஹம்ஜாவை வாவ்-ஆக எழுதப்படாமல் ஹம்ஜாவாகவே எழுதப்பட்டிருப்பதால், அந்த ஹம்ஜாவிற்கு பின்பு ஒரு அலிஃபை கூடுதலாக எழுதப்படவில்லை.

 

7 - பலாஉன் ( )  இது குர்ஆனில் 44:33, 37:106 ஆகிய வசனங்களில் வருகிறது. இவற்றின் கடைசியில் இடம்பெற்ற ஹம்ஜாவை வாவாக எழுதப்பட்டதால் அதற்கடுத்து ஒரு அலிஃபை கூடுதலாக எழுதப்பட்டு இருக்கிறது

 

முக்கிய கவனிப்பு:

2:49, 7:141, 8:17, 14:6 ஆகிய வசனங்களில் பலாஉன் ( ) என்பதில் கடைசி ஓரத்தில் இடம்பெற்ற ஹம்ஜாவை வாவ்-ஆக எழுதப்படாமல் ஹம்ஜாவாகவே எழுதப்பட்டிருப்பதால் அந்த ஹம்ஜாவிற்கு பின்பு ஒரு அலிஃபை கூடுதலாக எழுதப்படவில்லை.

      இவ்வாறு ஆரம்ப காலத்து எழுத்து விதியையும், அதற்குரிய ஆதார நூல்களையும், அவ்விதிப்பிரகாரம் குர்ஆனில் எழுதப்பட்டிருந்த சொற்களையும் அடுக்கடுக்காக நாம் பட்டியலிட்டு குர்ஆன் முழுவதும் 100% சரியாகத்தான் எழுதப்பட்டிருக்கிறது என்பதை ஆதாரத்துடன் நாம் நிரூபித்த பொழுது விழி பிதுங்கிய பி.ஜே. தூ.டி...சபையிடம் இச் சட்டத்தை நீங்களாகவே உருவாக்கிக்கொண்டீர்கள் என்றும், ஆரம்ப காலத்து எழுத்து விதி என்று கூறி விட்டு அதற்கு ஆதாரமாக தகவல் தரும் நூலை கூறியுள்ளீர்கள், ஆரம்ப காலத்து எழுத்து விதி என்றால் இப்படித்தான் எழுத வேண்டும் என்று கூறப்பட்டிருக்க வேண்டும் எனக்கூறி சரியான பதிலில்லாமல் பி.ஜே. தத்தளித்தார்.

தூ.டி... சபை சார்பில் அளிக்கப்பட்ட பதில்

தூ.டி...சபையிடம் இச் சட்டத்தை நீங்களாகவே உருவாக்கிக்கொண்டீர்கள் என்றும், ஆரம்ப காலத்து எழுத்து விதி என்று கூறி விட்டு அதற்கு ஆதாரமாக தகவல் தரும் நூலை கூறியுள்ளீர்கள், ஆரம்ப காலத்து எழுத்து விதி என்றால் இப்படித்தான் எழுத வேண்டும் என்று கூறப்பட்டிருக்க வேண்டும் என்று பி.ஜே. கூறியதால் மேற்சென்ற குர்ஆனிலுள்ள பட்டியல் அனைத்தும் சரியாகத்தான் எழுதப்பட்டிருக்கிறது என்பதை நிரூபிக்கும் விதத்தில் ஆரம்ப காலத்து எழுத்து விதியைக்கூறும் நூலான அல்புர்ஹான் ஃபீ உலூமில் குர்ஆன் என்ற நூலை பி.ஜே.யிடம் கொடுத்து அதை வாசித்துப் பாருங்கள். புரியவில்லையென்றால் எங்களிடம் கேளுங்கள். உங்களுக்கு பாடம் நடத்துகிறோம் என்றும் கூறினோம். மேலும்  நாங்கள் கூறிய எழுத்து விதிகளுக்கு அதில் ஆதாரங்கள் நிரம்பியிருக்கின்றன என்றும், மேலும் அல்முக்னிஃ என்ற நூலிலும் அதற்குரிய ஆதாரங்கள் நிரம்பியிருக்கின்றன என்றும் கூறி பி.ஜே.யின் கையில் கொடுத்த நூலை மக்களுக்கு வாசித்துக்காட்டுங்கள் என்றோம். ஆனால் அந்நூலில் ஆரம்ப காலத்து விதியைக் கூறப்பட்டிருந்ததால் அதை வாசித்துவிட்டால் பி.ஜே.யின் படுதோல்வியும், ஸஹாபாக்கள் குர்ஆனை சரியாகத்தான் எழுதியுள்ளார்கள் என்ற பேருண்மையும் விவாத அரங்கில் வெளிப்பட்டுவிடும் என்ற அச்சத்தால் பி.ஜே.யிடம் நாங்கள் கொடுத்த சட்ட நூலை விவாதத்தின் இறுதி வரை பி.ஜே. வசிக்கவேயில்லை.

 

No comments:

Post a Comment