Thursday 20 December 2012

தூத்துக்குடி விவாதம்- பாகம் - 1



بسم الله الرحمن الرحيم
போலி தவ்ஹீத்வாதிகளின் முகத்திரை கிழித்த தூத்துக்குடி விவாதம்.
கடந்த 29,30-09-2012 சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களாக தூத்துக்குடியில் புனிதக்குர்ஆனில் எழுத்துப்பிழைகளா? என்ற தலைப்பில் தூத்துக்குடி மாநகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக மவ்லவி .முஹம்மது முஸ்தஃபா மஸ்லஹி தலைமையில் மவ்லானா எம். ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி ஹழரத் அவர்கள் உட்பட ஐவர் குழுவும், ... சார்பாக சகோ. பி.ஜே. தலைமையில் ஐவர் குழுவும் விவாதித்தனர்.

தூத்துக்குடி மாநகர .. சபை நிலைப்பாடு
புனிதக்குர்ஆன் ஓசையிலும், எழுத்து வடிவிலும் இறைவனால் முழுமையாகப் பாதுகாக்கப்- படுகிறது. அதில் எவ்வித எழுத்துப்பிழையும் இல்லை. எழுத்துப்பிழை உண்டு என்று கூறுவது குர்ஆனையும் அதை எழுதிய எழுத்தர்களான ஸஹாபாக்களையும் அவமதிப்பதோடு அது யூத நஸாராக்களின் நச்சுக்கருத்தாகும் என்பது தூ.டி மாநகர .. சபையின் நிலைப்பாடாகும்.

போலி தவ்ஹீத்வாதி (..) களின் நிலைப்பாடு
திருக்குர்ஆன் ஓசையில் மட்டும்தான் பிழையின்றி பாதுகாக்கப்படுகிறது. எனவே குர்ஆனில் எழுத்துப்பிழைகள் உண்டு என்பது போலி தவ்ஹீத்வாதிகளின் நிலைப்பாடாகும்.

ஆணவமும், அவமானமும்
வெறும் பத்து நிமிடங்களில் குர்ஆனில் எழுத்துப்பிழைகளுண்டு என்பதை நிரூபித்து விடுவோம் என விவாத ஒப்பந்தத்தில் ... வினர் ஆணவம் பேசினர். ஆனால் இரண்டு நாட்களாகியும் பிழைகளை நிரூபிக்கமுடியாமல் திணறி மூக்கறுபட்டு அவமானப்பட்டுப்போயினர் ... வினர்.  
பி.ஜே.யின் அறியாமை – 1
இவ்விவாதத்தில் ... வினர் முதல் பிழையாக குர்ஆனிலுள்ள நுஞ்ஜி  نُنْجِي (21:88) என்பதை கூறினர். அதில் இரண்டாவது நூன் -(ن) விட்டுவிட்டு நுஜி( )என எழுதியுள்ளனர். பிழையாக விடுபட்ட நூன் -(ن) அடையாளம் காட்டுவதற்கு ஒரு சிறிய நூன் -(ن) போட்டுள்ளனர் என வாதித்தனர்.
தூ.டி... சபை சார்பில் அளிக்கப்பட்ட பதில்
நுஞ்ஜி  نُنْجِي (21:88) என்பதில் இரண்டாவது நூன் -(ن) விட்டு எழுதியது பிழையில்லை. மாறாக ஸஹாபாக்கள் அவர்களின் காலத்து எழுத்து முறையிலுள்ள ஒரு விதியைப்பேணி அவ்வாறு எழுதியுள்ளனர். அவ்விதிவென்னவெனில்  ஒரே இனத்தைச்சார்ந்த இரு எழுத்துக்கள் அடுத்தடுத்து வந்து அதில் இரண்டாவது எழுத்துசுக்கூன்பெற்றிருந்தால் அந்த இரண்டாவது எழுத்தை விட்டு எழுதுவது ஆரம்பகாலத்து  எழுத்து விதியாகும். ஆனால் வாசிக்கும் போது அதை உச்சரிப்பார்கள். உதாரணமாக குர்ஆனிலுள்ள யுஹ்யீ (يُحْيِي) மற்றும்தாவூது (دَاوُودُ) என்பதை எடுத்துக்கூறினோம்.
யுஹ்யீ (يُحْيِي) என்பதில் ஒரே இனத்தைச்சார்ந்த இரண்டுயே ((ي அடுத்தடுத்து வந்து  அதில் இரண்டாவதுயே ((ي சுக்கூன் பெற்றிருப்பதால் அதை ஸஹாபாக்கள் விட்டு எழுதியுள்ளனர்.
குர்ஆனிலுள்ள அனைத்து யுஹ்யீ (يُحْيِي) களும் இவ்வாறுதான் எழுதப்பட்டிருக்கும். எனினும் சட்ட அடிப்படையில் விடப்பட்ட அந்த எழுத்தை உச்சரிக்க வேண்டும் என்பதற்காகவும், ஆரம்பகா எழுத்து விதியை நாம் அறியாததாலும் விடப்பட்டயே ((يவை அறிவிப்பதற்காக எழுதப்பட்டிருக்கும்யே ((يக்கு அருகில் அரபுநாட்டு குர்ஆன் பிரதியில் ( ) ஒரு சிறியயே ((يயும் இந்திய நாட்டு குர்ஆன் பிரதியில் யே ((يக்கு கீழ் கடாஜேரும் ( ) போடப்பட்டிருக்கும்.
      அவ்வாறே தாவூது (دَاوُودُ) என்பதில் ஒரே இனத்தைச்சார்ந்த இரண்டுவாவ் (و) அடுத்தடுத்து வந்து அதில் இரண்டாவதுவாவ் (و) சுக்கூன் பெற்றிருப்பதால் அதை ஸஹாபாக்கள் விட்டு  எழுதியுள்ளனர். குர்ஆனிலுள்ள அனைத்துதாவூது (دَاوُودُ)உம் இவ்வாறுதான் எழுதப்பட்டிருக்கும். எனினும் சட்ட அடிப்படையில் விடப்பட்ட அந்தவாவ் (و)வை உச்சரிக்க வேண்டுமென்பதற்காகவும், ஆரம்பகாலத்து  எழுத்து விதியை நாம் அறியாததாலும் விடப்பட்டவாவ் (و)வை அறிவிப்பதற்காக எழுதப்பட்டவாவ் (و)வுக்கு மேல் அரபுநாட்டு குர்ஆன் பிரதியில் ஒரு சிறியவாவ் (و)வும் ( ) , இந்திய நாட்டு குர்ஆன் பிரதியில் உல்டா பேஷும் ( ) போடப்பட்டிருக்கும்.
      அது போலத்தான் நுஞ்ஜி (نُنْجِي) என்பதில் ஒரே இனத்தைச்சார்ந்த இரண்டு நூன் (ن) அடுத்தடுத்து வந்து அதில் இரண்டாவது நூன் (ن) சுக்கூன் பெற்றிருப்பதால் அதை ஸஹாபாக்கள் விட்டு எழுதியுள்ளனர். எனினும் சட்ட அடிப்படையில் விடப்பட்ட அவ்வெழுத்தை உச்சரிக்க வேண்டுமென்பதற்காகவும், ஆரம்பகாலத்து  எழுத்து விதியை நாம் அறியாததாலும், விடப்பட்ட அந்த நூன் (ن) அறிவிப்பதற்காக எழுதப்பட்ட நூன் (ن)க்கு மேல் அரபுநாட்டு குர்ஆன் பிரதியிலும், இந்தியநாட்டு குர்ஆன் பிரதியிலும் ஒரு சிறிய நூன் (ن) போடப்பட்டிருக்கும். எனவே நுஞ்ஜி (نُنْجِي) என்பது ஆரம்பகாலத்து  எழுத்து விதிப்படி சரியாகத்தான் எழுதப்பட்டிருக்கிறது என்று நாம் கூறினோம். மேலும் இதை சவூதி அரசாங்கமும் சவூதி குர்ஆன் பிரதியின் இறுதியில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனர் என்று கூறினோம்.
والحروف الصغيرة تدل على أعيان الحروف المتروكة فى خط العثمانية مع وجوب النطق بها
(எழுதப்பட்ட எழுத்துக்கு மேலுள்ள) சிறிய எழுத்துக்கள் உஸ்மான்(ரலி) அவர்களுடைய குர்ஆன்
மூலப்பிரதிகளில் (ஆரம்பகாலத்து  சட்ட அடிப்படையில்) விடப்பட்ட எழுத்துக்களை அறிவிக்கும். 
மேலும் அந்த சிறிய எழுத்தை ( ஹஃப்ஸ்(ரஹ்) உடைய கிராஅத்தின் பிரகாரம் ) மொழிவது
அவசியமாகும் என்று சவூதி அரசாங்கம் அச்சடித்துள்ளது. எனவே நுஞ்ஜி ( ) என்பது சரியாகத்தான் எழுத்தப்பட்டிருக்கிறது என்பதை ஆதாரங்களுடன் நாம் நிரூபித்த பொழுது திகைத்துப்போன பி.ஜே. குழுவினர் மறுபடியும் அவர்களது அறியாமையை போட்டுடைத்தனர்.

பி.ஜே.யின் அறியாமை - 2
அந்த அறியாமை என்னவெனில் குர்ஆனில் இடம்பெற்ற நன்ஸக் (نَنْسَخْ), நுன்ஸிஹா (نُنْسِهَا)
ஆகியவற்றில் இரண்டு நூன் (ن) சந்தித்து அதில் இரண்டாவது நூன் (ن) சுக்கூன் பெற்றிருந்தும் அதை எழுதப்பட்டிருக்கிறதே? இங்கு நீங்கள் கூறும் விதிப்பிரகாரம் இரண்டாவது நூன் (ن) விட்டு நஸக் (نَسَخْ) என்றும், நுஸிஹா (نُسِهَا) என்றும் தானே எழுதப்பட்டிருக்கவேண்டும் ? என்று கேள்வி கேட்டு அவர்களின் அறியாமையை வெளிப்படுத்தினர்.

தூ.டி... சபை சார்பில் அளிக்கப்பட்ட பதில்
குர்ஆன் ஏழு முறைகளில் அருளப்பட்டிருக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதாரப்- பூர்வமான ஹதீஸ் புகாரியில் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் நுஞ்ஜி (نُنْجِي) என்பதில் இரு விதமாக ஓதும் முறை (கிராஅத்) இருக்கிறது.
ஒன்று : நுஞ்ஜி (نُنْجِي)
இரண்டு : நுஜ்ஜி (نُجِّي)
ஆனால் நன்ஸக் (نَنْسَخْ), நுன்ஸிஹா (نُنْسِهَا) என்பதில் ஒரே ஒரு கிராஅத் மட்டும்தான் இருக்கிறது. எனவே நுஞ்ஜி (نُنْجِي) என்பதில் ஆரம்பகாலத்து  எழுத்து முறையை பேணி எழுதும் போது நுஞ்ஜி (نُنْجِي) என்ற கிராஅத்திற்கும் நுஜ்ஜி (نُجِّي) கிராஅத்திற்கும் எந்த பாதிப்பும் வராது. ஆனால் நன்ஸக் (نَنْسَخْ), நுன்ஸிஹா (نُنْسِهَا) என்பதில் ஆரம்பகாலத்து  விதியைப் பேணி இரண்டாவது நூன் (ن) விட்டு எழுதினால் நஸக் (نَسَخْ) என்றும், நுஸிஹா (نُسِهَا) என்றும் கிராஅத் இருப்பதாக தவறாக விளங்கிவிடக்கூடாது என்பதற்காக நிர்பந்தத்தினால் இங்கே ஆரம்பகாலத்து  எழுத்து விதியை பேணாமல் குர்ஆனின் ஓதும் முறையை (கிராஅத்தை) பேணி இரண்டாவது நூன் (ن) எழுதியுள்ளனர். எனவே ஸஹாபாக்கள் அதிகவனத்துடன்தான் குர்ஆனை எழுதியுள்ளனர். எழுத்து விதியை பேணும் இடங்களில் அவ்விதியையும், கிராஅத்தை பேணும் இடங்களில் கிராஅத்தையும் பேணி மிகக்கவனமாக சரியாகத்தான் எழுதியுள்ளனர் என்று நாம் பதில் கூறியவுடன் ...வினர் விழி பிதுங்கி பதிலில்லாமல் குர்ஆனை இழிவுபடுத்த ஆரம்பித்தனர்.




குர்ஆனை இழிவுபடுத்திய ...வினர்
  நுஞ்ஜி (نُنْجِي) என்ற வார்த்தை பிழையாக எழுதப்பட்டிருக்கிறது என்று வாதத்தை துவங்கிய ... வினருக்கு அது சரியாகத்தான் எழுதப்பட்டிருக்கிறது என்பதற்கு ஆரம்பகாலத்து எழுத்து முறையை குர்ஆனிலிருந்தே நாம் நிரூபித்ததும் விவாதத்தின் துவக்கத்திலேயே தோல்வி யடைந்து திகைத்துப்போன ... வினர் எங்களை கிண்டலடிக்கத்துவங்கினர். ஆனால் எங்களை கிண்டலடிக்கும் பெயரில் குர்ஆனைத்தான் அவர்கள் கிண்டலடித்தனர். அது என்ன வெனில்நுஞ்ஜி “ க்கு பதிலளிக்காமல் “ இஞ்சி “ திண்ணதைப்போல இருக்கின்றீர்களே ! என்று எங்களைப்பார்த்து கூறினர். இறைச்சொல்லான நுஞ்ஜி “ க்கு எதிகைமோனையில்      இஞ்சி “ என்று கூறி குர்ஆனையே இழிவுபடுத்தினர் த.த.ஜ. வினர்.

பி.ஜே. யின் அறியாமை - 3
  யுஹ்யீ (يُحْيِي)  என்பதற்கு நீங்கள் கூறிய சட்டம் யுஹ்யீக்கும் “ (يُحْيِيكُمْ) என்பதில் உடை- படுகிறதே ! “ யுஹ்யீக்கும் “ (يُحْيِيكُمْ) என்பதில் இரண்டாவதுயே ((يவை எழுதப்பட்டிருக்- கிறதே ? நீங்கள் கூறிய விதிப்பிரகாரம் அதை போக்கித்தானே எழுதவேண்டும் ? என்று கேள்வி கேட்டு பி.ஜே. குழு அவர்களின் அறியாமையை வெளிப்படுத்தினர். 

தூ.டி... சபை சார்பில் அளிக்கப்பட்ட பதில்
و يحيى مع ضمير لا مفردا (الإتقان فى علوم القرآن للسيوطي 2-445)
  யுஹ்யீ (يُحْيِي)  என்பதை தனியாக எழுதும் போது இரண்டாவதுயே ((يவை போக்கப்பட வேண்டும். ஆனால் அது பிரதிப்பெயர்ச்சொல்லுடன் இணைந்து வரும்பொழுது இரண்டாவதுயே ((يவை போக்கக்கூடாது என்று ஆரம்ப காலத்து எழுத்து விதி இருக்கிறது “அல் இத்கான்” என்ற நூலில் பாகம் 2:445 ல் கூறப்பட்டுள்ளது என்று ஆதாரத்துடன் நாம் பதிலளித்ததும் பி.ஜே. குழு வாயடைக்கப்பட்டனர்.

பி.ஜே. யின் அறியாமை - 4
குர்ஆனில் 96:15 ல்லனஸ்ஃபஅன் “ (لَنَسْفَعًا) என்பதும், 12:32 ல்வலயகூனன் “ (وَلَيَكُونًا) என்பதும் பிழையாக எழுதப்பட்டிருக்கிறது. ஏனெனில் அவ்விரண்டும் வினைச்சொல்லாகும். வினைச்சொல்லின் இறுதியில்தோஜபர்வராது. மாறாக அவற்றிற்கு சுக்கூன் பெற்ற நூன்(ن) தான் வரும். எனவே لَنَسْفَعنْ என்றும், وَلَيَكُونَنْ என்றும் தான் எழுதப்பட வேண்டும் என பி.ஜே. குழுவினர் அவர்களின் உச்சக்கட்ட அறியாமையை வெளிப்படுத்தினர்.

தூ.டி... சபை சார்பில் அளிக்கப்பட்ட பதில்
أدب الكتاب لابن قتيبة - (1 / 51)
وتكتب " إذاً " بالألف ولا تكتبه بالنون؛ لأن الوقوف عليها بالألف، وهي تشبه النون الخفيفة في مثل قوله تعالى: (لَنَسْفَعاً بالنَّاصية) (ولَيَكُوناً منَ الصَّاغرين) إذا أنت وقفتَ وقفت بألف، وإذا وصلتَ وصلت بنون
القاموس المحيط - (1 / 1737)
 بأب
 أ : حَرْفُ هِجاءٍ ويُمَدُّ وبالمدِّ : حَرْفٌ لِنِداءِ البعيدِ . وأُصولُ الألِفاتِ ثلاثةٌ وتَتْبَعُها الباقِياتُ : أصْلِيّةٌ : كأَلْفٍ وأخَذَ . وقَطْعِيَّةٌ : كأَحمَدَ وأحْسَنَ . ووَصْلِيَّةٌ : كاسْتَخْرَجَ واسْتَوْفَى . وتَتْبَعُها الأَلِفُ الفاصِلَةُ تَثْبُتُ بعدَ واوِ الجمعِ في الخَطِّ لتَفْصِلَ بين الواوِ وما بعدَها : كشَكَرُوا والفاصِلَةُ بين نونِ عَلاماتِ الا ناثِ وبين النونِ الثَّقيلةِ : كافْعَلْنانِّ . وألفُ العِبارةِ وتُسَمَّى العامِلةَ : كأَنا أسْتَغْفِرُ اللّهَ . والأَلِفُ المجهولَةُ : كأَلِفِ فاعَلَ وفاعُولٍ وهي كُلُّ ألِفٍ لا شْباعِ الفتحةِ في الاسمِ والفِعْلِ . وألِفُ العِوَض : تُبْدَلُ من التَّنْوين : كَرَأَيْتَ زَيْداً . وألِفُ الصِّلَةِ : تُوصَلُ بها فتحةُ القافيةِ والفَرْقُ بينَها وبين ألِفِ الوَصْلِ أنَّ ألِفَها اجْتُلِبَتْ في أواخِرِ الأسْماءِ وأَلِفَه في أوائِلِ الأسْماءِ والأفْعالِ . وألِفُ النونِ الخفيفة كقوله تعالى لَنَسْفَعاً بالناصِيةِ .
المغرب في ترتيب المعرب - (2 / 450)
 أما " الألف " : فتُبدل من أختيها ومن الهمزة والنون . فإبدالها من أختيها في نحو : قال وباع ودعاِ ورمى . ومن الهمزة في نحو : آدم لأن أصله أادَمُ " أَفْعَلُ " من الأدْمة . ومن النون : في الوقف خاصة ِ في نحو : ( لنَسْفَعا ) واللهَ ربَّك فاعبُدا ( 315 / ب )
لسان العرب - (15 / 426)
 (وروى الأَزهري عن أَبي العباس أَحمد بن يحيى ومحمد بن يزيد أَنهما قالا أُصول الأَلفات ثلاثة ويتبعها الباقيات أَلف أَصلية وهي في الثلاثي من الأَسماء وأَلف قطعية وهي في الرباعي وأَلِفٌ وصلية وهي فيما جاوز الرباعي قالا فالأصلية مثل أَلِفِ أَلِفٍ وإلْفٍ وأَلْفٍ وما أَشبهه والقطعية مثل أَلف أَحمد وأَحمر وما أَشبهه والوصلية مثل أَلف استنباط واستخراج وهي في الأفعال إذا كانت أَصلية مثل أَلف أَكَل وفي الرباعي إذا كانت قطعية مثل أَلف أَحْسَن وفيما زاد عليه أَلف استكبر واستدرج إذا كانت وصلية قالا ومعنى أَلف الاستفهام ثلاثة تكون بين الآدميين يقولها بعضهم لبعض استفهاماً وتكون من الجَبّار لوليه تقريراً ولعدوّه توبيخاً فالتقرير كقوله عز وجل للمسيح أَأَنْتَ قُلْتَ للناس قال أَحمد بن يحيى وإنما وقع التقرير لعيسى عليه السلام لأَن خُصُومه كانوا حُضوراً فأَراد الله عز وجل من عيسى أن يُكَذِّبهم بما ادّعوا عليه وأَما التَّوْبِيخُ لعدوّه فكقوله عز وجل أَصطفى البنات على البنين وقوله أَأَنْتُم أَعْلَمُ أَم اللهُ أَأَنْتُمْ أَنْشَأْتُمْ شَجَرتها وقال أَبو منصور فهذه أُصول الأَلفات وللنحويين أَلقابٌ لأَلفات غيرها تعرف بها فمنها الأَلف الفاصلة وهي في موضعين أَحدهما الأَلف التي تثبتها الكتبة بعد واو الجمع ليفصل بها بين واو الجمع وبين ما بعدها مثل كَفَرُوا وشَكَرُوا وكذلك الأَلفُ التي في مثل يغزوا ويدعوا وإذا استغني عنها لاتصال المكني بالفعل لم تثبت هذه الألف الفاصلة والأُخرى الألف التي فصلت بين النون التي هي علامة الإناث وبين النون الثقيلة كراهة اجتماع ثلاث نونات في مثل قولك للنساء في الأمر افْعَلْنانِّ بكسر النون وزيادة الألف بين النونين ومنها أَلف العِبارة لأَنها تُعبر عن المتكلم مثل قولك أَنا أَفْعَلُ كذا وأَنا أَستغفر الله وتسمى العاملة ومنها الألف المجهولة مثل أَلف فاعل وفاعول وما أَشبهها وهي أَلف تدخل في الأفعال والأَسماء مما لا أَصل لها إنما تأْتي لإشباع الفتحة في الفعل والاسم وهي إذا لَزِمَتْها الحركةُ كقولك خاتِم وخواتِم صارت واواً لَمَّا لزمتها الحركة بسكون الأَلف بعدها والأَلف التي بعدها هي أَلف الجمع وهي مجهولة أَيضاً ومنها أَلف العوض وهي المبدلة من التنوين المنصوب إذا وقفت عليها كقولك رأَيت زيداً وفعلت خيراً وما أَشبهها ومنها أَلف الصِّلة وهي أَلفٌ تُوصَلُ بها فَتحةُ القافية فمثله قوله بانَتْ سُعادُ وأَمْسَى حَبْلُها انْقَطَعا وتسمى أَلف الفاصلة فوصل أَلف العين بألف بعدها ومنه قوله عز وجل وتَظُنُّون بالله الظُّنُونا الألف التي بعد النون الأخيرة هي صلة لفتحة النون ولها أَخوات في فواصل الآيات كَقوله عز وجل قَواريرا وسَلْسَبِيلاً وأَما فتحة ها المؤنث فقولك ضربتها ومررت بها والفرق بين ألف الوصل وأَلف الصلة أَن أَلف الوصل إنما اجتلبت في أَوائل الأسماء والأفعال وألف الصلة في أَواخر الأَسماء كما ترى ومنها أَلف النون الخفيفة كقوله عز وجل لَنَسْفَعًا بالنَّاصِيةِ وكقوله عز وجل ولَيَكُوناً من الصاغرين الوقوف على لَنسفعا وعلى وَليكونا بالألف وهذه الأَلف خَلَفٌ من النون والنونُ الخفيفة أَصلها الثقيلة إلا أَنها خُفّفت من ذلك قول الأعشى ولا تَحْمَدِ المُثْرِينَ والله فَاحْمَدا أَراد فاحْمَدَنْ بالنون الخفيفة فوقف على الألف
அரபு மொழியில் பலவகையான அலிஃப் ( ا ) கள் இருக்கின்றன. அதில் ஒன்று அலிஃபுன் நூனில் கஃபீஃபா (الف النون الخفيفة)வாகும். இது வினைச்சொல்லின் இறுதியில் வருமென்று இப்னு குதைபா அவர்கள் அதபுல் கிதாப்(أدب الكتاب لابن قتيبة - (1 / 51) என்ற அவரது நூலில் கூறியுள்ளார். மேலும் அல்காமூஸுல் முஹீத்(1/1737) மற்றும் லிஸானுல் அரப் (15/426) போன்ற பல அகராதி நூட்களிலும் கூறப்பட்டுள்ளது, மட்டுமல்ல அலிஃபுன் நூனில் கஃபீஃபா (الف النون الخفيفة)வுக்கு லனஸ்ஃபஅன் “ (لَنَسْفَعًا), “ வலயகூனன் “ (وَلَيَكُونًا) என்பதை உதாரணமாகவும் கூறியுள்ளார்கள். எனவே ஸஹாபாக்கள் அதை சரியாகத்தான் எழுதியுள்ளார்கள். ஆனால் அரபு மொழியில் அலிஃப் ( ا ) எத்தனை வகை,லனஸ்ஃபஅன், வலயகூனன்ஆகியவற்றின் கடைசியிலுள்ள அலிஃப் எந்த வகை அலிஃப் என்ற  அடிப்படை சட்டத்தைக்கூட தெரியாமல் உங்களிடம் முழு அறியாமையை வைத்துக்கொண்டு ஸஹாபாக்கள் சரியாக எழுதியதை தவறாக எழுதிவிட்டனர் என்று கூறி ஏன் உங்கள் அறியாமையை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றீர்கள்? என்று நாம் கேட்டதும், பி.ஜே. குழுவினர் அசடு வழிந்தனர். இதில் விஷேசமென்னவெனில் அலிஃபுன் நூனில் கஃபீஃபா (الف النون الخفيفة) என்பது இக்காலத்தின் சட்டத்திலும் இருக்கின்றது. எனவே பி.ஜே. மற்றும் அவரது குழுவினர் ஆரம்பகாலத்து எழுத்து விதியையும் அறியவில்லை, இக்காலத்து எழுத்து விதியையும் அறியவில்லை என்கிற பேருண்மை நிரூபணமானது.

2 comments:

  1. முஸ்தபா ////குர்ஆனையும் அதை எழுதிய எழுத்தர்களான ஸஹாபாக்களையும் அவமதிப்பதோடு அது யூத நஸாராக்களின் நச்சுக்கருத்தாகும் என்பது தூ.டி மாநகர ஜ.உ. சபையின் நிலைப்பாடாகும்.////

    1இந்த உங்களது நிலைப்பாடு தவறு என்று தவ்ஹித் ஜமாஅத் தூத்துக்குடியில் நிருபித்ததா ?இல்லையா?
    2இரண்டு நூன்கள் ஒரு சேர வந்து அதில் இரண்டாவது நூன் சுக்கூன் பெற்று இருந்தால் அதில் இரண்டாவது நூனை விட்டுவிடலாம் என்பதற்கு “அல் இத்கான்” என்ற நூலில் ஆரம்ப கால விதி யை காட்டுங்கள்

    ///எழுத்து விதியை பேணும் இடங்களில் அவ்விதியையும், கிராஅத்தை பேணும் இடங்களில் கிராஅத்தையும் பேணி மிகக்கவனமாக சரியாகத்தான் எழுதியுள்ளனர்////

    இரண்டு நூங்கள் ஒரு சேர வந்தால் அதில் இரண்டாவது நூனுக்கு சுக்கூன் இருந்தால் இரண்டாவது நூனை கண்டிப்பாக விடவேண்டும் என்று அந்தஆரம்பகால விதி கூறுகிறதா?

    ReplyDelete
  2. முஸ்தபா அவர்களே நான் அனுப்பிய மெயில்களுக்கு பதில் ரெடிபண்ணிக் கொண்டு இருக்கிறேன் என்று தாங்கள் போனில் கூறி 2 மாதங்கள் ஆகிவிட்டனவே ,எஏன் இன்னும் பதில் தரவில்லை?

    ReplyDelete